Skip to main content

“வெங்கட் பிரபு கூறியது என்னை உத்வேகப்படுத்தியது...”- நடிகர் இனிகோ பிரபாகர்!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

inigo prabhakaran

 

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

 

சென்னை 28, சென்னை 28 -II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்துப் படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையைக் கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

 

நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என் நடிப்பைப் பலரும் பாராட்டியதாகக் கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது. 

 

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 

'ஆர்.கே நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?' என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைத்தளத்தில் கேட்டிருந்தனர். அதற்குக் 'கண்டிப்பாக செய்வேன்' என்று பதலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்