உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை வழங்க மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் குழு செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த அமைப்பின் மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைக்கப்பட்டிருக்கிறார். இதனை அந்த அமைப்பு தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அறிவித்துள்ளார்கள். சினிமா துறையில் ராம் சரணின் பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார்.
94 ஆவது அகாடமி விருதுகளில் ராம் சரண் நடித்த 'ஆர் ஆர் ஆர் ' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு..' பாடலுக்காக சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் இந்த நடிகர்களின் குழுவில்... லஷானா லிஞ்ச், விக்கி க்ரிப்ஸ், லூயிஸ் கூ டின்-லோக், கேகே பால்மர், சாங். சென், சகுரா ஆண்டோ, ராபர்ட் டேவி, மற்றும் பலர் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் இணைக்கப்பட்டார். ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.