Published on 11/07/2020 | Edited on 11/07/2020
![26 year old bengal actress police complaint](http://image.nakkheeran.in/cdn/farfuture/kC4zL3Dtbl6TEaplQZyDsAB4_LRlXAlOKuiekTDERMI/1594451190/sites/default/files/inline-images/Untitled-2_21.jpg)
தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெங்காலி நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான பெங்காலி டிவி நடிகை அளித்துள்ள புகாரில், தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் என்னிடம் பொருளாதார உதவி கேட்டு என்னுடைய அபார்ட்மெண்டிற்கு வந்தார். நான் தனியாக வசிக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த நபர், என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். மேலும், அதைத் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து மிரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போலீஸிடம் சென்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியபோதும் 8ஆம் தேதி தைரியமாக ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.