Published on 04/02/2025 | Edited on 04/02/2025
தமிழில் 'என்னை அறிந்தால்', 'உத்தம வில்லன்', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். கடைசியாக விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஆஷ்ரித் அசோக் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி நாயர் தெரிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு தற்போது திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.