இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நோயை மறைத்து ஏமாற்றிய ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார். பொதுவாக பாராளுமன்றத்தில் எம்பி அவர்களுக்கு நிறைய அதிகாரம் இருக்கிறது. ஒரு எம்பி அவர் காருக்கு இன்சூரன்ஸ் கேட்டு வந்திருந்தார். அவருக்கு நான்கு மாதத்தில் பாலிசியை போட்டு வாங்கி கொடுக்கப்பட்டது. அந்த கார் விபத்து விபத்துக்குள்ளாகியது. அதற்கு செட்டில் பண்ண வேண்டியிருந்தது, இன்சூரன்ஸில் 64 விபி என்ற ஒரு ஆக்ட் இருக்கிறது. இன்சூரன்ஸ் ஆக்டிவ் ஒரு பிரிவு இருக்கிறது. அந்த இன்ஷூரன்ஸ் ஆக்ட் என்ன சொல்கிறது என்றால், இன்சூர் பண்ணுகிற அன்று கட்டிய பிரீமியம் பணம் அந்தப் பேங்கிற்கு வந்திருக்க வேண்டும். அதன்படி இவருடைய செக் ஹானர் ஆகி இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டியது.
செக் கிளியர் ஆகி வரவே இல்லை. எங்கள் பேங்கில் விசாரிக்கும்போது அது டெல்லியில் பார்லிமென்ட் ஹவுஸில் இருக்கும் ஒரு பேங்க் என்று தெரியவந்தது. நாங்கள் இருந்தது தமிழ்நாடு. செக் கவர் டெல்லியில் கொடுத்திருக்கிறார். நடுவில் செக் என்ன ஆனது என்று தெரிய விசாரிக்க வேண்டி இருந்தது. டெல்லியில் இருக்கும் எங்கள் கிளை அலுவலகத்திடம் விசாரித்த போது அந்த செக் டிஸ் ஆனர் ஆக இருக்கிறது என்ற விஷயம் தெரிய வந்தது. ஏன் என்ன ஏன் காரணம்? அடுத்து எம்பிக்கு அந்த தகவலை சொன்னோம். ஆனால் அவர் அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அது தவறான அரசியல் உள்நோக்கம் கொண்டு தவறான புகார் அளிக்கிறீர்கள் என்று சொன்னார். திருப்பி அந்த பேங்கில் மீண்டும் சரிபார்க்கப்பட்டபோது, அவர் செக்கை கொடுத்த போது அவர் அக்கவுண்டில் 100 ரூபாய் தான் சார் இருந்தது என்று தகவல் வந்தது.
இன்றும் நூறு ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னார். அவரிடம் ரிப்போர்ட் ஒன்னு வாங்கிக் கொண்டோம். அடுத்து அந்த எம்பி சந்திக்க வந்தார். அவரிடம் பேங்க் அளித்த ரிப்போர்ட்டை கொடுத்தோம் அவரிடம் பொதுத்துறை நிறுவனத்தை ஏமாற்றுவதாக கம்பளைண்ட் கொடுத்தால் 138 வாரன்ட் போட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்ற நிலைமையை எடுத்து சொன்னோம். கிளைமே தனக்கு வேணாம் என்று எழுதி கொடுத்து போய்விட்டார்.
பாராளுமன்றத்தில் டிசிப்ளினரி கமிட்டி என்று இருக்கிறது. அந்த கமிட்டியில் அப்ரூவ் பண்ண வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். ஆளுங்கட்சி தலைவர்கள் இருப்பார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து பார்லிமென்ட்ரி உறுப்பினர் மீது வழக்கு எடுக்கலாம் என்று முடிவு எடுக்க முடியும். இந்த கேஸ் வந்து கருப்பு வெள்ளை வழக்கு. இதை அவரால் மறுக்க முடியாது. மறுத்தால் பாதிக்கப்பட்ட கம்பெனி சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் பொழுது அவர் பக்கமே தான் சாதகமாக இருக்கும். எம்பி பக்கம் நிற்காது. பாராளுமன்றத்தில் 23 மெஜாரிட்டி இருந்தால் மட்டும்தான் சுப்ரீம் கோர்ட் நிதியை ரத்து பண்ண முடியும். ஆனால் அது நடைமுறையில் இல்லை.அதுவும் இல்லாமல் இது எக்கனாமிக்கல் அஃபென்ஸ் கேஸ். இதில் பாராளுமன்றமும் தலையிட முடியாது. எனவே செக் கொடுக்கும்போதோ இன்சூரன்ஸ் எடுக்கும் போதோ அக்கவுண்டில் அதற்கான பணம் இருக்க வேண்டும்.