“நீண்ட பயணத்தின் சோதனைகளைக் கண்டு செஞ்சேனை அஞ்சவில்லை
ஆயிரம் மலைகளையும் நதிகளையும் அது ஒரு பொருட்டாகக் கருதவில்லை!”
-மாவோ
உலகம் கண்ட எத்தனையோ புரட்சிகளில் சீனாவின் மக்கள் புரட்சி மகத்தானது. சியாங்கே ஷேக்கின் கொடூரமான ராணுவத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் நடத்திய நெடிய பயணம் பெற்ற வெற்றிக்கு நிகராக சரித்திரத்தில் வேறு எதுவும் இல்லை. மக்கள் பங்களிப்போடு கிடைக்கும் வெற்றி காலத்தைக் கடந்தும் நீடிக்கும். அந்த வெற்றியை மக்களே பாதுகாப்பார்கள் என்பதற்கு சீனா இன்றுவரை சாட்சியாக இருக்கிறது.
மக்கள் தலைவர் மாவோ தலைமையில் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜியாங்ஷியிலிருந்து தொடங்கிய இந்த பயணம் 370 நாட்கள் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மக்கள் சீனத்தை அமைத்தது. 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி ஷான்ஸி மாகாணத்தில் செஞ்சேனையின் மூன்று பிரிவுகளும் ஷான்ஸி நகரில் சங்கமித்தபோது, உயரமான மலைகளையும் ஆறுகளையும் அவை கடந்து வந்திருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தப் பயணம் காவு வாங்கியிருந்தது.
ஆனால், இன்று மக்கள் சீனம் உலகின் முன்மாதிரி சோசலிஸ நாடாக நிலைபெற்றிருக்கிறது. மக்கள் சீனத்தை உருவாக்கிய மக்கள் தலைவரின் வாழ்க்கைக் கதையை நக்கீரன் இணையதளம் தொடராக தொடங்கவிருக்கிறது.