தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், டைவர்ஸுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
திருமணமான பெண் ஒருவர் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தார். தனக்கு திருமணமாகி இருவருக்குள் ஏற்பட்ட முறிவில் ரிலேஷன்சிப் சரியில்லாததால் டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கிறோம் எனச் சொன்னார். டைவர்ஸ் கூடிய விரைவில் வரும். அதனால், டைவர்ஸ் பற்றி பேச வேண்டாம். ஆனால், டைவர்ஸ் வரும் இந்த இடைப்பட்ட காலத்தில், எனது 9 வயது மகன், 6 வயது மகள் மற்றும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்துகொள்ள தான் வந்தேன் என சிம்பிளாக சொன்னார்.
டைவர்ஸ் அப்ளை செய்திருக்கிறோம் ஆனால், அதை பற்றி பேச வேண்டியதில்லை என்று நீங்கள் கூறும்போதே உங்களுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்துவீட்டீர்கள் என ஆரம்பித்தேன். இனி இருப்பது நிகழ்காலமும், எதிர்கால வாழ்க்கையும் தான். நிகழ்காலத்தில் நீங்கள் ஏதோ வேலை செய்கிறீர்கள். ஒரு 25 வருடம் கழித்து உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி நினைத்து பாருங்கள் என அவரிடம் கேட்டேன். உங்கள் குழந்தையை கவனிக்க பைனான்ஸிலாக ஒரு வளர்ச்சி வேண்டும். பைனான்ஸ் வளர்ச்சிக்கு நீங்கள் இருக்கும் இப்போதையை வேலையில் கிடைக்குமா எனக் கேட்ட போது, கிடைக்கும் ஆனால் சந்தேகமாக இருக்கிறது. அதனால், வேறு ஏதாவது ஒன்றை சிந்திக்க வேண்டும் என்றார்.
வேறு ஏதாவது சிந்திக்க வேண்டும் என்றாலே ஸ்கில்லை டெவெலப் செய்ய வேண்டும் அல்லது, எதாவது ஒரு பிசினஸ் செய்து பிராண்டை டிபெண்ட் பண்ணி இருக்க வேண்டும் என்றேன். உங்களிடம் என்ன ஸ்கில் இருக்கு எனக் கேட்ட அவர் வேலை பார்க்கும் டெக்னிக்கல் சம்பந்தமாக சில விஷயங்கள் தெரியும் என சொன்னார். இதை நீங்கள் இனிமேல் எம்ப்ளாயாக இல்லாமல் வெளியே வந்து மல்டிபிளாக செய்து பைனான்ஸ் வளர்ச்சியை உருவாக்குங்கள் எனச் சொல்லி அதைப் பற்றி நிறைய பேசினோம்.
அப்பாவுடன் இருந்த குழந்தைகள், திடீரென்று அப்பா இல்லாமல் தனியாக வாழும் போது அது பற்றி நிறைய கேள்விகள் கேட்கும். அது அவர்களுக்கு நிறைய வலியை தரும். கணவனின் ஆப்சன்ஸ் உங்களை பாதிக்காமல் இருந்தாலும், அப்பாவினுடைய ஆப்சன்ஸ் குழந்தைகளை நிறையவே பாதிக்கும். பொதுவாக, டைவர்ஸ் ஆன பிறகு அப்பாவை பற்றி நெகட்டிவிட்டியாக பேசி அப்பாவை வெறுக்க வைத்துவிடுவார்கள். அப்பாவை வெறுக்க வைக்கும் முயற்சியில், சில நேரம் குழந்தைகள் ஆண்களையே வெறுத்துவிடுவார்கள். அதனால், அந்த நெகட்டிவிட்டியை அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை என்றேன். நண்பர்களுக்குள் ஏற்படும் விரிசல் எப்படி சகஜமானதோ அப்பா - அம்மா உறவுக்குள் இருக்கும் பிரிவும் சகஜமானது தான் என்பதைக் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி புரிய வைக்க வேண்டும் என்றேன்.
இதையடுத்து, உங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது, ஆண்களைக் கண்டாலே வெறுப்பு வருகிறது அதனால், இன்னொரு திருமணமே வேண்டாம் எனச் சொன்னார். உங்களுக்கு ஒரு அனுபவம் வருகிறது அதை வைத்து எதிர்காலத்திலும் இப்படி தான் நடக்கும் என முடிவு செய்கிறோம். ஆனால், நாம் அனுபவித்த அந்த அனுபவம் முற்றிலும் தவறு என மாற்றக்கூடிய நபர்களும் எதிர்காலத்தில் வருவார்கள். அப்படி வரும்போது, உங்களால் ஓபன் மைண்ட்டாக பார்க்க முடிந்தால் நீங்கள் அடுத்த பார்வையும் யோசிக்க முயற்சி செய்யலாம் எனச் சொன்னேன். ஒன்றரை வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வந்து அவர் கவுன்சிலிங் எடுத்தார். இந்த மாதிரி கவுன்சிலிங் எடுக்கவில்லை என்றால், எரிச்சலடைந்தோ அல்லது குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டியோ, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு இருந்திருப்பேன், ஆனால் இப்போது அது இல்லை எனச் சொன்னார். அதன் பிறகு அவர்களுக்குள் டைவர்ஸும் ஆனது.