Skip to main content

சிங்கிள் பேரண்டாக மாறிய அப்பா; மகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 39

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
jay zen manangal vs manithargal 39

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், ஆண்கள் சிங்கிள் பேரண்டாக இருப்பதால் மகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அப்பாவுக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார். 

ஒரு அப்பாவும் மகளும் கவுன்சிலிங்கிற்கு வருகிறார்கள். மனைவி சில வருடங்களுக்கு உடல்நிலை காரணமாக இறந்துவிட்டதால், இவர் சிங்கிள் பேரண்டாக மாறிவிடுகிறார். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத, இவர் தொழில், வீடு, மகள் இதுதான் உலகம் என்று வாழக்கூடிய ஒரு சிறப்பான மனிதர். மனைவி இறந்துவிட்டதை தவிர எந்தவித பிரச்சனை இல்லையென்றும், மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைக்கும் வரை வாழ வேண்டும் என்று அப்பா பேசத் தொடங்குகிறார். அவருக்கு பிரச்சனையென்றால், மனைவி இல்லாத இந்த வாழ்க்கையில், அப்பா- மகள் உறவை எப்படி கொண்டு போக வேண்டும், என்ன மாதிரியான கவனத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான் அவரது கேள்வி. 

அம்மா இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்வோரோ அதையெல்லாம் இவரும் செய்கிறார். இவருக்குள் இருப்பது ஒரு அழகான உறவு. எப்போதுமே நம்மிடம் இரண்டு வெர்சன் இருக்கும். ஒரு ஆணிடம், மேக்சிமம் மேல் (Male) வெர்சனும், கொஞ்சம் ஃபீமேல் (Female) வெர்சனும் இருக்கும். அதே போல், ஒரு பெண்ணிடம் மேக்சிமம் ஃபீமேல் வெர்சனும், கொஞ்சம் மேல் வெர்சனும் இருக்கும். இவருக்கு, மேல் வெர்சன் ஆஃப் மேல் ஏற்கெனவே இருக்கிறது. சமுதாயம் தன் மகளை எப்படி பார்க்க வேண்டும், கல்வி மூலமாக தன் மகளை என்ன உயரத்துக்கு போக வேண்டும், ஒருவேளை மகளிடம் திறமை இருந்தால் அந்த திறமையை உலகளவில் எப்படி வெளிகொண்டு வர வேண்டும் என்று யோசிப்பார். இது எல்லாம் மேல் வெர்சன் ஆஃப் மேல் இல் இருக்கும். ஃபீமேல் வெர்சன் ஆஃப் ஃபீமேல் இதை பார்த்தோம் என்றால், காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, சரியான நேரத்திற்கு போவது என குடும்பம் சார்ந்த கண்ணோட்டத்தில் அதிகமாக கவனம் எடுப்பார்கள்.

இந்த பெண்ணை பொறுத்தவரை மேல் வெர்சன் ஆஃப் மேல் வெர்சன் கிடைக்கிறது. ஆனால், ஃபீமேல் வெர்சன் ஆஃப் ஃபீமேல் இந்த பொண்ணுக்கு சின்ன சின்ன விஷயங்களில் கிடைப்பதில்லை. அம்மாவுக்கும், மகளுக்கும் இடையில் சின்ன சின்ன அழகான விளையாட்டுத்தனங்கள் எல்லாம் இந்த பெண் மிஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் சரி செய்யலாம் என்பதை பற்றி அவரிடம் சொன்னேன். டீனேஜ்ஜுக்குண்டான சில சிந்தனைகளை அப்பாவிடம் பேச முடியாது, அம்மாவிடம் மட்டும் தான் பகிர்ந்திருக்க முடியும். இதை நீங்கள் யோசித்து செயல்படுத்தலாம் என்பதை சொன்னேன். அப்பா சாப்பிட்டாரா என்று கேள், தம்பியை பார் என அம்மா எப்போதுமே தன் மகளை உணர்வுப்பூர்வமாக தயார்படுத்துவார். இதை நீங்கள் செய்யலாம் என அவரிடம் சொன்னேன். 

ஒரு பெண் யாராவது ஒருவரைக் காதலித்தால், அப்பா பிரியமாக இருந்தால் அந்த விஷயத்தை அவரிடம் சொல்வாள். அப்பா பிரியமாக இல்லையென்றால், அம்மா எப்படி இருந்தாலும் அவரிடம் தான் சொல்வாள். அந்த பேச்சை நீங்கள் இப்பொழுதே ஆரம்பிக்கலாம் என அவரிடம் சொன்னேன். இதையெல்லாம் கேட்டு அவர், இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதே இப்போது தான் தெரிகிறது என்று சொன்னார். அதன் பிறகு அவர் போய்விட்டு ஒரு இரண்டு மாதங்கள் கழித்து வந்தார். ரொம்ப நன்றி எனத் தெரிவித்தார். தினமும் காபி போட்டுக் கொடுத்துவிட்டு இது தான் லவ் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒரு நாளும் காபி வேண்டுமா, டீ வேண்டுமா என கேட்டதில்லை. அம்மாவாக இருந்திருந்தால் இதை கேட்டிருப்பார். அவருக்கு என்ன பிடித்திருக்கு என்பதை கேட்டதில்லை. ஆனால், உங்களிடம் பேசிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இனிஸியேட் செய்ய இப்பொழுது தான் என் மகள் நிறைய சொல்ல ஆரம்பிக்கிறாள். முன்பெல்லாம் தேடி தேடி ஹோட்டலுக்கு சென்று பிடித்ததை வாங்கி கொடுப்பேன். ஆனால், ஃபீமேல் வெர்சன் பற்றி கேட்ட பிறகு, யூடியூப் பார்த்து அவளுக்கு சமைத்து கொடுக்கிறேன். ரொம்ப சந்தோஷப்பட்டாள். முன்பெல்லாம், டிரெஸ் மட்டும் தான் வாங்கிக்கொடுப்பேன். இப்போது அந்த டிரெஸுக்கு மேட்ச்சாக ஹேர் பின், வளையல் இதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன். டிரஸ் வாங்கிக் கொடுத்ததில் பார்க்காத சந்தோஷத்தை, அந்த ஹேர் பின் வாங்கியதில் கொடுக்கிறது எனச் சொல்லி சந்தோஷப்பட்டார்.