சிறு வயதில் நடந்த கொடூரமான சம்பவத்தினால் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் விவாகரத்து கேட்டு பிரிய நினைக்கும் பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
35 வயது தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு லேட் ஆக தான் திருமணம் நடந்திருக்கிறது. இப்போ திருமணம் பிரிவை நோக்கி செல்ல என்னை பார்க்க வந்திருந்தார். ரொம்ப யோசித்து பர்சனல் விஷயத்தை பகிர்ந்தார். என்ன பிரச்சனை என்னவென்றால் இந்த பெண்ணுக்கு தாம்பத்தியம் மேல் விருப்பம் இல்லை. காரணம் கேட்டால் தெரியவில்லை , ஆனால் பிடிக்கவே இல்லை என்றார். அவர் கணவருக்கு எதிர்பார்ப்பில் நிறைவேறவில்லை என்றதும் தான் பிரச்சனையாக வந்திருக்கிறது. கணவரிடம் எவ்வளவு சொன்னாலும் அவர் புரிந்து கொள்வதில்லை என்றார்.
பிடிக்காததற்கு காரணம் அருவருப்பாக இருக்கலாம், வலியாக இருக்கலாம், அல்லது பழைய நினைவாக இருக்கலாம் என்று சொன்னேன். பழைய நினைவு என்று சொல்லும்போது மட்டும் அவர் ஏதோ உணர்ந்ததை நான் கவனித்தேன். பழைய நினைவுகள் ஏதாவது இருக்கிறதா என்றதும் அதிர்ச்சியாகி மெல்ல தான் பேச ஆரம்பித்தார். யாரோ ஒரு மனிதர் இந்த பெண்ணை சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். அந்த மனிதருடைய முகம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. வயதானவர், மிரட்டும் குரலும், முரட்டுத்தனமான நபர் அவர். இதை வெளியில் பேசக்கூடாது என்று மிரட்டியும் இருக்கிறார். இது பலமுறை வேறு நடந்திருக்கிறது. இதைப்பற்றி இனிமேல் பேசக்கூடாது என்ற ஒரு உணர்வு மட்டும் இவருக்கு பலமாக மனதில் பதிந்து விட, ஒரு வலியோடே இருந்திருக்கிறார். இவரைப் பொறுத்த வரைக்கும் செக்ஸுவல் லைப் என்றால் அந்த மிரட்டும் முகம், யாரிடம் சொல்லக்கூடாது என்ற அந்தக் குரல்.
எனவே ஒரு ஆண் நெருங்கி வந்தாலே அவருக்கு பிடிக்கவில்லை. யாராவது சாதாரணமாக நெருங்கி வந்தால் கூட ரொம்ப பயந்து விடுகிறார். இது இவர் நினைவில் இருந்து வெளியில் போகாதவரை இவருக்கு இந்த வாழ்க்கை பிடிக்காது என்று புரிந்தது. முதலில் இவருக்கு பிடித்த முகம் என்ன என்று கேட்டதற்கு பல விஷயங்களை சொன்னார். குழந்தை சிரிப்பது, மற்றும் கணவர் தவறு செய்துவிட்டு பார்க்கும் குறும்பான பார்வை பிடிக்கும் என்றார். அதை அப்படியே விட்டுவிட்டு கடந்த காலத்தில் உங்களுக்கு இதைத் தவிர உடல் சார்ந்த ஏதாவது வலி இருந்ததா என்று கேட்டேன்.
அவர் தனக்கு பல் எடுத்தது மிக வலியாக இருந்தது என்றார். எனவே அவரிடம் தினமும் பல்லை விளக்குவது, மூன்று வேளை சாப்பிடுவது இல்லையா? ஏன் அந்தப் பழைய பல் வலி ஞாபகம் வரவில்லை என்று கேட்டதற்கு அது தெரியவில்லை சார் என்றார். கணவர் மனைவியாக இருவருக்கும் பிடித்த நேரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது இருவருக்கும் கமல் ரஜினி பிடிக்கும் அதனால் சேர்ந்து படம் பார்க்கும்போது இருவரும் அதற்காக விளையாட்டாக சண்டை போட்டுக் கொள்வோம் என்றார். பேசிய இந்த மூன்று சம்பவங்களை மட்டுமே அவருக்கு நினைவூட்டப்பட்டது.
இனிமேல், அந்த மிரட்டும் முகத்திற்கு பதிலாக கணவரின் பிடித்த முகத்தை நினைவுபடுத்தி பார்க்குமாறு பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்ததாக பல் வலி எப்படி நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதில்லையோ, அதேபோல் நடந்த அந்த வலியையும் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி புரிய வைத்தேன். அடுத்ததாக கணவரை பிரியும் வரை போயிருந்தாலும் அவருடன் வாழ்ந்த நல்ல தருணங்களும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது என்று அதை அவருக்கே அவ்வபோது நினைவுப்படுத்த சொன்னேன். அதற்கு அவர், நீங்கள் சொல்வதை சரி செய்து பார்க்கிறேன், இருந்தாலும் இது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்னு தெரியவில்லை என்றார். அதற்கு நான், மனிதர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் கொஞ்சம் நம்பிக்கை நிறைய நம்பிக்கையின்மை. ஆனால் வாழ்க்கையை சாதிப்பவர்கள் அவர்கள் மீது வைத்த கொஞ்ச நம்பிக்கையினால் தான் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அதை மட்டும் தான் சொன்னேன். அத்தனுடன் கவுன்சிலிங் முடிந்தது. ஒரு ஆறு மாதம் கழித்து என்னை தொடர்பு கொண்டார். இரண்டு நல்ல விஷயங்களை சொன்னார். ஒன்று டைவர்ஸ் கேன்சல் செய்யப்பட்டது. இன்னொன்று இப்பொழுது தினமும் பல்லை வளக்கி கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லி முடித்தார். இதை விட நாகரிமாக, ஒரு பெண் ஒரு ஆண் கவுன்சிலரிடம் அழகாக பேசிப் புரிந்து செயல்படுத்தி டைவர்ஸை கேன்சல் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு கவிதை மாதிரி தான். அவரது வாழ்க்கையும் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.