
முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
கணவனை இழந்த பெண் ஒருவர் திருமண வயதில் இருக்கக்கூடிய தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அந்த பெண் என்னிடம் வந்து, என்னுடைய மகள் நல்ல வேலையில் இருக்கிறாள். ஆனால் வீட்டைவிட்டு வெளியே எங்கு சென்றாலும் தனியாகத்தான் செல்கிறாள். கூட என்னையும் அழைத்து செல் என்று கூறினால், அதற்கு மறுப்பு தெரிவித்து எப்போதுமே தனியாக செல்கிறாள். வீட்டிற்கு மிகவும் தாமதமாக வருகிறாள். கணவன் இல்லாத காரணத்தை கூறி தன் மகளை யாரும் தவறாக பேசிவிடக்கூடாது. அதனால் மகள் என்ன செய்கிறாள் எங்கு போகிறாள் என்பதை விசாரித்து சொல்லுங்கள் என்று கூறினார்.
அதே போல் நானும் அந்த அம்மாவின் மகளை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தோம். பகல் நேரங்களில் எப்போதும்போல் கடைக்கு செல்வது, வேலைக்கு செல்வது என்ற சாதாரண நடைமுறை வாழ்க்கையில்தான் அந்த பெண்ணின் நேரங்கள் கழிந்தது. ஆனால் இரவு 10 மணிக்கு வெளியே சென்றால் திரும்பி வீடு திரும்ப நள்ளிரவு 1 அல்லது 2 மணி ஆகிவிடுகிறது. இப்படியே தொடர்ந்து அந்த பெண்ணை கண்காணித்ததில் ஒரு பையனுடன் இரவு தங்கி அவனுடன் ஜாலியாக இருந்தது தெரியவந்தது. இது தினமும் நடந்து வந்தது. அந்த பையன் வராத சமயத்தில் மட்டும்தான் இந்த பெண் அவனைப் பார்க்க செல்லாமல் இருக்கிறாள் மற்ற நேரங்கள் எப்போதுமே அந்த பையனுடனே அவளது இரவுகள் சென்றது.
இதனை ரிப்போட்டாக அந்த பெண்ணின் அம்மாவிடம் கொடுத்தப்போது, அந்தம்மா தனது மகளை அழைத்து ஒரு பையனுடன் நீ இரவு தங்கியிருப்பதாக என்னிடம் சிலர் கூறினர். உனக்கு பிடித்திருந்தால் அந்த பையனின் வீட்டில் பேசி அவனை திருமணம் செய்துகொள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த பெண் திருமணம் வேண்டாம். நான் அவனுடன் இப்போது இருப்பதுபோல் எப்போதுமே ஜாலியாக இருக்கத்தான் விரும்புகிறேன். திருமணத்தில் எனக்கு பெரியதாக விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறாள்.
அதன் பின்பு அந்த அம்மா என்னிடம் வந்து நடந்ததை கூறினார். அதற்கு நான் அந்த பெண்ணை கவுன்சிலிங் வரவழைத்து, இந்த வயதில் வேலைக்கு சென்று தனியாக சம்பாதிப்பதால் செய்வதெல்லாம் சரி என்று தோன்றும். வயதான பிறகு மிகவும் கஷ்டப்பட வாய்ப்பிருக்கிறது என்று என்னால் முடிந்த சில அறிவுரைகளையும் இதற்கு முன்பு இதேபோல் வந்த கேஸில் ஒரு பெண் திருமணமாகாமல் கஷ்டப்பட்டதையும் கூறினேன். மேலும் திருமண வாழ்க்கையில் சில கஷ்ட நஷ்டங்கள் வரும் இருந்தாலும் சில நேரங்களில் குடும்பமாக இருப்பது வாழ்க்கையில் நிறைவாக இருக்கும் என்றேன்.