Skip to main content

பெண்களின் உள்ளாடைகளை வைத்து உல்லாசம்; இறந்த பின்னும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :74

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
thilagavathi ips rtd thadayam 74

உமேஷ் ரெட்டி என்ற சீரியல் கில்லர் செய்த கொடூரச் சம்பவங்களை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

இரவில் வெளியே சென்ற, திவ்யாவும், பல்லவியும் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லைக்கு ஆளான கீதா என்ற பெண்ணின் மூலம் உமேஷ் ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். 

மூன்று பெண்கள் சம்பந்த வழக்குகள் கோர்ட்டில் நடக்கிறது. இதில், பல்லவி வழக்கில், உமேஷ் ரெட்டி தான் குற்றவாளி என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அந்த வழக்கில் அவரை விடுவிக்கிறார்கள். அதே போல், கீதாவுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் சிறிய சிராய்ப்பு காயங்கள் தான் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இதை ஒரு பெரிய வழக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை. திவ்யா என்ற பெண்ணும், தனக்கு நேர்ந்த கொடுமையை மறைத்து வெறும் திருட்டு புகாராக மட்டும் கொடுத்ததால், குற்ற வழக்காக மட்டும் தான் பதிவாகியிருக்கிறது. உமேஷ் ரெட்டியை அடையாளம் காணாததாலும், நகைகளும் கிடைக்காததாலும், அந்த வழக்கையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், உமேஷ் ரெட்டிக்கு ஜாமீன் வழங்குகிறது. 

இதையடுத்து, உமேஷ் ரெட்டில் சித்திரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வந்துவிடுகிறார். வீட்டில் தனியாக ஒரு பெண் இருக்கும் நேரத்தில் ஒரு நபர் புகுந்துவிட்டதாகவும், அவனை புடித்து வைத்திருப்பதாகவும் மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்துக்கு போன் வருகிறது. அவனை பற்றி விசாரிக்கையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரமேஷ் என்று சொல்கிறான். அவன் தங்கிருக்கும் அறையை போலீசார் சோதனை செய்த போது, தாலிகள், செயின்கள், வெள்ளி பொருட்கள், பெண்களுடைய உல்லாடைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். தொடர்ந்து அவனிடம் விசாரிக்கையில், சித்திரதுர்கா காவல் நிலையத்தில் நடந்த குற்றச் செயல்களில் சந்தேகிக்கப்பட்ட உமேஷ் ரெட்டி, இவன் தான் என்று தெரியவருகிறது. அதில், திவ்யாவின் தாலியும், பல்லவியின் வெள்ளி பொருளும் அங்கு கிடைக்கிறது. இந்த பொருட்களை அந்த வழக்குகளோடு தொடர்புபடுத்தி உமேஷ் ரெட்டியை கைது செய்து பெங்களூரில் இருந்து பெல்லாரி சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால், உமேஷ் ரெட்டில் அங்கிருந்து தப்பித்துச் செல்கிறான். பிடிப்பட்ட பின் மீண்டும் தப்பித்துச் செல்கிறான். இது மாதிரி காவல்துறையிடம் இருந்து ஐந்து முறை தப்பித்து சென்றிருக்கிறான். இப்போது அவன் தப்பித்து, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றான். வீட்டில் தனியாக இருக்கும் ஏராளமான பெண்களுக்கு, ஏதோ ஒன்றை சொல்லி வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் திருடி நிர்வாணப்படுத்தி கயிற்றால் கட்டிவிட்டு தப்பித்து விடுகிறான். 

இவனால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள், இந்த விஷயத்தை வெளியே கொண்டுவரவில்லை. காவல்துறைக்கும் புகாராக தெரிவிக்கவில்லை. இதனால், உமேஷ் ரெட்டிக்கு தைரியம் கொடுக்கிறது. இப்படியாக வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது அவள் சத்தம் போடுகிறாள். இதனால், மேல்மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவனுக்கு கால் முறிவு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் அவன் போலீசிடம் பிடிபடுகிறான். அந்த நேரத்திலும், அவன் காவல்துறையிடம் இருந்து தப்பித்துவிடுகிறான். அதன் பிறகு, நித்யா என்று கர்ப்பிணி பெண்ணிடம் திருடும்போது அவள், உமேஷ் ரெட்டியை பிரஷர் குக்கரால் தாக்குகிறாள். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவங்களை கூறிய பின், அவர்கள் எல்லாம் சேர்ந்து உமேஷ் ரெட்டியை பிடித்துவிடுகிறார்கள். மீண்டும் போலீசிடம் அகப்படுகிறான். இந்த வழக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் சிறையில் அடைத்தாலும், அங்கிருந்து தப்பித்துவிடுகிறான். 

இப்படியாக, பெங்களூரில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணை கொலை செய்டு தப்பித்துவிடுகிறான். அந்த பெண்ணை பிரேத பரிசோதனை செய்து பார்த்தால், அந்த பெண் பலமுறை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. அந்த பெண் உயிரிழந்த பிறகும் கூட பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்ற சான்றும் போலீஸுக்கு கிடைக்கிறது. இந்த வழக்கில் உமேஷ் ரெட்டியை கைது செய்து விசாரிக்கிறார்கள். செக்ஸ்வலுக்கான தூண்டலை பெண்களின் உள்ளாடைகளை பார்க்கும் போதுதான் பெறுவதாகவும், இரவு நேரத்தில், அந்த உள்ளாடைகளை அணிந்து சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் கூறுகிறான். காவல்துறையினர், இவனை பிடிக்கும் போதெல்லாம், உமேஷ் ரெட்டியை சோதனை செய்கிறார்கள். அப்படி ஒவ்வொரு சோதனையிலும், இவனுடைய உள்ளாடைகளுக்குள் உள்ளே பெண்களுடைய ஏதோ ஒரு உள்ளாடையை தான் அணிந்திருக்கிறான். ஜெயஸ்ரீ வழக்கில் உமேஷ் ரெட்டியை கைது செய்து, சிறைக்கு அழைத்துச் செல்லும்போது மீண்டும் தப்பித்துவிடுகிறான். இந்த சம்பவம் 1998ஆம் ஆண்டில் நடக்கிறது. இவனை பற்றிய தகவல்கள் அனைத்து பத்திரிகைகளில் வர ஆரம்பிக்கிறது. உமேஷ் ரெட்டியை பிடிக்க பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். உமேஷ் ரெட்டியை பற்றி தகவல் சொன்னால், சன்மானம் கொடுக்கப்படும் என்று போலீசார் அறிவிக்கிறார்கள். 

இப்படி இருக்கும் சூழ்நிலையில், 2002ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி சக்திவேல் என்ற ஆட்டோ டிரைவர், யஷ்வந்த்பூர் காவல் நிலைக்க்கு போன் போட்டு, சலூன் கடையில் உமேஷ் ரெட்டியை அடையாளம் கண்டதாக சொல்கிறார். போலீஸ் அந்த இடத்திற்கு வருவதற்குள், அங்கிருந்து செல்கிறான். அதன்படி, அவனை போலீசார் பின்தொடர்ந்து, உமேஷ் ரெட்டியை பிடித்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் அவன் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தால், அதிலும் அதிகமாக பெண்களுடைய உள்ளாடைகள் தான் இருக்கின்றன. அவனின் அறையை சோதனை செய்து பார்த்தாலும், அதிலும் பெண்களின் உள்ளாடைகள் தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட அவனிடம் 150 கிலோ பெண்களின் உள்ளாடைகள் தான் இருக்கின்றன. இவன் தங்கிருக்கும் ஏரியாவில், துவைத்து காயப்போட்டிருக்கும் பெண்களின் உல்லாடைகளையும், பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் உல்லாடைகளையும் திருடி வைத்திருக்கிறார். பெண்களின் உள்ளாடைகளை திருடியுள்ளார் என்றே இவன் மீது தனி வழக்கு இருக்கிறது. 

அதனை தொடர்ந்து அவனை கைது செய்த பின்பு, கோர்ட்டில் வழக்குகள் நடக்கிறது. அப்போதும், இவன் சம்மந்தப்பட்ட குற்றச்செயல்களில் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் பல வழக்குகள் இவனுக்கு சாதகமாக வருகிறது. ஜெயஸ்ரீ வழக்கில், அந்த பெண்ணுடைய 7 வயது மகன் சாட்சியாக இருப்பதால், அந்த வழக்கு மட்டும் இவனுக்கு எதிராக இருக்கிறது. அதனால், இந்த வழக்கில் மிக உறுதியாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வருகிறது. இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டும், ஜெயஸ்ரீ வழக்கில் 7 வயது மகனின் சாட்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டும், ஃபாஸ்ட் டிராக் கோர்ட் நீதிபதி சுகன்யா, உமேஷ் ரெட்டிக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறார். இன்னொரு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை, இரண்டு வழக்கிலும் ரூ 50,000 அபராதம், இது எல்லாம் அனுபவித்த பிறகு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறார். இதனையடுத்து, இந்த வழக்கு உமேஷ் ரெட்டி ஹை கோர்ட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறான். ஆனால், அவனுடைய கோரிக்கைகள் ஏற்காமல், நீதிபதி சுகன்யா தீர்ப்பை முன்மொழிந்தனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறான். அதில், இரண்டு நீதிபதி விசாரிக்கிறார்கள்.  இரண்டு பேரும் மாறுப்பட்ட தீர்ப்பளித்ததால், மூன்றாவது நீதிபதியை நியமிக்கிறார்கள். ஆனால், அங்கு நீதிபதி சுகன்யா கொடுத்த தீர்ப்பை தான் மீண்டும் முன்மொழிந்தனர். அதன் பிறகு, மறுபடியும் ஒரு அப்பீலை போடுகிறான். ஆனால், அங்கும் அந்த தீர்ப்பை முன்மொழிகின்றனர்.

இதனையடுத்து, ஜனாதிபதியிடம் கருணை மனு போடுகிறான். 2012ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பிரனாப் முகர்ஜி அந்த மனுவை ரிஜக்ட் செய்கிறார். அதன் பிறகு, சுப்ரீம் கோர்ட் கான்ஸ்டிடூயுசன் பெஞ்சுக்கு மீண்டும் அப்ளை செய்கிறான். தான் உயிர் வாழ்வதற்காக தொடர்ச்சியாக, இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கிறான். கான்ஸ்டிடூஷனல் பெஞ்ச், உமேஷ் ரெட்டிக்கு விதித்த தூக்கு தண்டனையை குறைத்து 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.