சுற்றி உள்ளவர்கள் பாடி ஷேமிங் செய்ததால் தன்னம்பிக்கை இழந்த சிறுமிக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யரஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
தன் குழந்தையைக் கூட்டி வந்த அம்மா, எல்லா நேரமும் பயத்துடனும் தயக்கத்துடன் தன் மகள் இருக்கிறார். தன்னம்பிக்கையே சுத்தமாக இல்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் வந்திருந்தார். காரணம் அந்த பெண் குழந்தையிடம் பேசும்போது தெரிந்தது. ஒல்லியான உடல் காரணமாக அவமானம் மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் தவித்துக் கொண்டிருந்தாள். தன் தோழிகள் மற்றும் உறவினர்களின் ‘பாடி ஷேமிங்’ அவளை மேலும் துன்புறுத்தி இருக்கிறது. தன் அம்மாவிடம் ஆதரவு தேடினாலும் அவர்களைக் கண்டு கொள்ளாதே என்ற அறிவுரை மட்டுமே அவளுக்கு கிடைத்தது.
அவர்களுடைய பேரன்ட்ஸ் ரெண்டு பேருமே ஒல்லியாக இருந்தார்கள் இது ஒரு ஜீனாக கூட இருக்கலாம். இப்பொழுது குண்டாக இருந்தால் தான் தவறு என்பது இல்லாமல் ஒல்லியாக இருந்தால் கூட தவறு என்று வீட்டில் இருக்கவே பிடிக்காதது தன்னையே வெறுத்தல் போன்ற பிரச்சனைகளால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள். எல்லாரும் தன்னை கிண்டல் செய்வது கூட ஒத்துக்கொண்டாலும் ஆனால் தான் அந்த இடத்தில் தன்னுடைய அம்மா வந்து தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதுதான் அந்த குழந்தையை ரொம்ப பாதித்திருந்தது. இதை முதலில் அம்மாவிடம் பேசும்போது அவர் சொன்னார் இதே பிரச்சினை தனக்கும் இருந்ததாகவும் மகளை பேசும்போது நான் கூட பேசினால் மனநிம்மதி போய்விடும் என்பதால் மன அமைதிக்காக அவர்களை கண்டு கொள்ளாதே என்று மட்டும் அட்வைஸ் செய்கிறேன் என்றார்.
இந்த நிலையிலிருந்து மீண்டு வர, அவளுக்கு சில வழிமுறைகள் பரிந்துரைத்தேன். தினமும் ஐந்து நிமிடங்கள் கண்ணாடி முன் நின்று சிரிக்க வேண்டும், தன்னை பற்றிய நல்ல விஷயங்களைக் கண்ணாடியில் பார்த்துச் சொல்ல வேண்டும், ‘செல்ஃப் லவ்’ பயிற்சிகள் செய்ய வேண்டும் போன்றவை சொல்லி தன் உடல் இப்படித்தான் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளவும், கேலி செய்பவர்களிடம் சிரித்துக்கொண்டே பதிலளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரைத்தேன். தன்னை நேசிக்கக் கற்றுக்கொண்டால், மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை தானாக வரவேண்டும் என்று அவளுக்கு ஊக்கமாளித்தேன். அதே நேரத்தில், தன் மகளுக்கு ஆதரவாகப் பேச வேண்டும், மகளின் ஆரோக்கியம் பற்றி பேச வேண்டும், உடல் பற்றி பேசக்கூடாது என்று அம்மாவுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
அவள் அம்மாவிடமும் நான், இதற்கு பிறகும் யாராவது ஒல்லியாக இருப்பதாகச் சொன்னால் அவள் அப்படித்தான் ஆரோக்கியமாக நன்றாகத்தான் சாப்பிடுகிறாள் அவள் இப்படித்தான் என்று அவள் ஆதரவு கொடுத்துப் பேசுங்கள் என்று அறிவுரை கூறினேன். அவள் உடல்வாக அப்படித்தான் என்று அவளை அவளோடு சேர்ந்து நில்லுங்கள் என்றேன். பெற்றவர்கள் தன் குழந்தைகள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டு, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் அழகாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் இருப்பதை அவர்களுக்கு உறுதியளிக்கவும் வேண்டும்.