குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
சஞ்சித் என்ற பையனுடைய வழக்கு இது. இந்த பையன், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கிறார்கள். அதன்படி, அகதியாக இங்கு வந்த பெண்ணுக்கு,பெரியளவில் பொருளாதாரம் இல்லாததால், அவளுக்கு தாங்களே 20 பவுன் நகை போட்டு, தேவையான அனைத்தையும் பையன் வீட்டாரே செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் ஆனந்தமாக போகிறது.
அந்த பெண்ணை விட, சஞ்சித்துக்கு இரண்டு வயது சிறியவன். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதத்திற்கு முன்பாகவே, சஞ்சித் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, இவர்களுக்கு நார்த் மெட்ராஸில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு தான், பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்கிறார்கள். பெண்ணை சிறிய வயதுடைய அந்த பையன், சின்னபிள்ளைத்தனமாக இருக்கிறான். நண்பர்களோடு சினிமா செல்வது, பார்க், உடலுறவு, ஜாலியாக இருப்பது மட்டுமே வாழ்க்கை என்று எண்ணம் கொண்டிருக்கிறான். குடும்பத்தில் உள்ள பொறுப்பை ஏற்காமல் இருக்கிறான். இதனாலே, அவளுக்கு இவன் மீதான ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. இதற்கிடையில், அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
சஞ்ஜித்தின் நண்பர்களோடு இணைந்து இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் போது, ஒரு கட்டத்தில் ஒரு நபரோடு மட்டும் இந்த பெண் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். இதனை கண்ட சஞ்ஜித்துக்கு, மனைவியை பார்க்கும் போது வித்தியாசமாக தெரிகிறது. இதை பற்றி மனைவியிடம் கேட்டாலும், ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்துவிடுகிறாள். தன்னுடைய சகோதரரை பார்ப்பதாக சொல்லி, வாரம் ஒருமுறை அந்த பெண் வெளியே செல்கிறாள். தனிக்குடித்தனம் இருந்த அவர்களையும், குழந்தையும் கவனிப்பதற்காக சஞ்ஜித்தின் பெற்றோர் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். இதில், மருமகளின் நடவடிக்கையில் வித்தியாசம் இருப்பதை அம்மா உணர்கிறார்.
ஒரு நாள் சஞ்ஜித் தன்னுடைய அம்மா அப்பா வீட்டில் தங்கிவிடுகிறான். அடுத்த நாள் தன் வீட்டுக்குச் சென்று பார்க்கும்போது பொருட்கள் என அனைத்தையுமே இல்லாமல் இருந்தது. மேலும், மனைவி, குழந்தை என யாருமே அங்கு இல்லை. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அவன், தன் அப்பாவை அழைத்து நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறான். எங்கு தேடியும் மனைவி காணவில்லை. மனைவி நெருங்கி பழகும் நண்பனையும் எங்கும் காணவில்லை. மனைவியை எங்கு தேடியும் கிடைக்காத விரக்தியினால், நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்ச கொஞ்சமாக மது குடிக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தின் இவன், மதுவுக்கு அடிமையாகி விடுகிறான். இதனால், பையனை மீட்க டீ அடிக்சன் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுகிறார்கள். பையனை மீட்க வேண்டுமென்றால் மனைவியையும், குழந்தையையும் கண்டுபிடித்தால் மட்டுமே அது நடக்கும் என டாக்டர் அட்வைஸ் செய்ய அதன்படி, கனடாவில் இருக்கும் அந்த பெண்ணுடைய அண்ணனை தொடர்பு கொள்கிறார்கள். அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததால், பெண்ணுடைய சகோதரி வீட்டுக்கு சென்று விசாரித்தாலும் அங்கும் கிடைக்கவில்லை. கடைசியில், சஞ்ஜித் இருக்கும் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்காரரிடம் விசாரிக்கையில், சஞ்ஜித்தோடு இருக்கும் இரண்டு நண்பர்கள் லாரியில் லோடு ஏற்றுவதையும், இதை பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அந்த இரண்டு நபர்களை தேடி ஒரு கட்டத்தில் கண்டுபிடித்து விசாரிக்கையில், பெண்ணும், அந்த பையனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற உண்மையை சொல்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாததால் பேப்பரில் ஒரு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில், சஞ்ஜித்துடைய அம்மா என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். பையனுக்கு இரண்டாவது திருமணம் செய்தால் மாற்றம் ஏற்படும் என்று சொன்னார். இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமென்றால், முதல் திருமணத்திற்கு டைவர்ஸ் போட வேண்டும். அந்த பெண் எங்கு சென்றாள் என்று தெரியாததால், பெண்ணுடைய அக்கா வீட்டுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அந்த அட்ரஸ்ஸில் இல்லை என்று திரும்பி வந்தது. இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பினால் எந்த தகவலும் கிடைக்காததால் கோர்ட்டில் பேப்பர் பப்ளிகேஷனுக்கு ஆர்டர் கேட்டோம். ஆனால், அதிலும் எந்தவிதமான பதிலும் வரவில்லை. அதன் பிறகு, அந்த பெண் வராமலே ஒரு தலைபட்சமான டைவர்ஸை வாங்கினோம். சில வருடங்கள் கழித்து, தெய்வ நம்பிக்கை உள்ள ஒருவரிடம் சஞ்ஜித் பழக ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக குடியை நிறுத்துவிட்டார். ஆனால், அந்த பையன் ஒரு விபத்தில் தன் உயிரைவிட்டான்.