குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
சுப்ரியா என்ற பெண்ணுடைய வழக்கு இது. டெல்லியிலே வளர்ந்த சுப்ரியாவின் அப்பா சென்ரல் கவர்மெண்டில் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டுக்கு ஒரே மகளான சுப்ரியா, நன்றாக படித்தாலும், சோஷியல் சர்வீஸ் செய்யக்கூடிய ஆர்கனிஷேசனில் வாலண்டியராக சேர்ந்து சோஷியல் சர்வீஸ் செய்து வந்துள்ளார். அதன் பிறகு மேட்ரிமோனி மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பையனுடைய வரன் வருகிறது. பெற்றோர் முன்னிலையில் இவர்களுக்குள் திருமணம் நிச்சயக்கப்பட்ட பின்னும் சுப்ரியா, பையனுடன் பேச நினைத்தாலும் அவன் சரிவர பேச மாட்டிக்கிறான். பையனுக்கு கூச்ச சுபாவம் இருக்கும் என நினைத்து அவளும் அதை சாதாரணமாக கடந்து செல்கிறாள்.
பையனுடைய பெற்றோர் ஆசைப்படி, சென்னையில் திருமணம் நடைபெற்று பையனுடைய வீட்டிலேயே சுப்ரியா இருக்கிறாள். அதன் பின், ஒரு குறிப்பிட்ட நாளில் ஹோட்டலில் சுப்ரியாவும் பையனும் தங்குகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் தான் திருமண உறவு நன்றாக இருக்கும் என்று சொல்லி சுப்ரியா அந்த பையனுடன் பேச முயல்கிறாள். ஆனாலும், தனக்கு ரொம்பவே டயர்டாக இருக்கிறது என்று தூங்குகிறான். அவளும் இதை பெரிதுபடுத்தாமல் இருக்கிறாள். இருப்பினும், சுப்ரியா பையனுடன் பேச நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அதை தவிர்த்துக்கொண்டே வருகிறான். இதைப்பற்றி தன் மாமியாரிடம் கேட்டாலும், சிறுவயதில் இருந்தே அவன் அப்படித்தான் என பையனுடைய சொல்ல, அதையும் அவள் ஏற்றுக்கொள்கிறாள்.
எங்காவது தனியாக இருவரும் வெளியே செல்லலாம் என்று சுப்ரியா தனது கணவரை அழைத்தாலும் எதற்கும் ஓபன் ஆகாமல் ஏதாவது காரணத்தை சொல்லி தவிர்த்து விடுகிறான். வீட்டிலேயே இருப்பதால் தான் அம்மாவின் கைப்பிடியில் இருக்கிறார், அதனால் தனிக்குடித்தனம் சென்று இருந்தால் கணவர் தன்னுடன் பேசி நெருக்கமாக இருப்பார் என்று சுப்ரியா தனது மாமியாரிடம் சொல்ல, அவரும் பையன் வீட்டில் இருந்து அரை மணி நேர தூரத்தில் ஒரு வீட்டை பிடித்து அவர்களை தங்க வைக்கிறார். எந்த ஒரு பொருளும் இல்லாத அந்த வீட்டில், பொருள்களை வாங்க அனைத்தும் செலவுகளையும் பையனுடைய அப்பா ஏற்கிறார். பெண்ணுக்கு மாமியார் வீட்டில் எந்தெந்த பிரச்சனை வருமோ அந்த பிரச்சனையெல்லாம் சுப்ரியாவுக்கு வரவில்லை. இருப்பினும், தனியாக அந்த வீட்டில் இருந்தாலும் சுப்ரியாவுடன் அவன் சரியாகவே பேசுவதில்லை. இல்லற உறவில் ஈடுபட சுப்ரியா அழைத்தாலும், பழகிய பின் உறவில் ஈடுபடலாம் என அதையும் தவிர்த்துவிடுகிறான். இருவரும் ஹனிமூனுக்கு சென்றாலும் அவன் சுப்ரியாவிடம் மனசு விட்டு பேசுவதில்லை. இதைபற்றி தன் மாமியாரிடம் சொன்னாலும், அவனுடைய மாமா சொன்னால் அவன் கேட்டுக்கொள்வான் என்று கூறி அந்த பையனுடைய மாமாவை அழைக்கிறார்கள். ஆனால், சுப்ரியாவை தவிர்த்துவிட்டு பையனுடன் மாமா பேசுகிறார்.
அதன் பின், தனக்கு ஏதோ வலி இருப்பதால் ஒரு சர்ஜரி செய்ய வேண்டும் என்று சுப்ரியாவிடம் அந்த பையன் கூறுகிறான். எதற்காக சர்ஜரி செய்ய வேண்டும் என்று கேட்டாலும் அதற்கு அவன் பதிலளிப்பதில்லை. இதற்கிடையில், சுப்ரியாவை அவளது அம்மா வீட்டில் ஒரு வாரம் இருக்க சொல்லி, அதற்குள் பையனுடைய மனசை மாத்துகிறோம் என பையனுடைய மாமா சொல்கிறார். அதன்படி, சுப்ரியாவும் டெல்லியில் ஒரு வாரம் தங்குகிறாள். இதற்கிடையில், பையனுக்கு செய்த சர்ஜரி குறித்த ரிப்போர்ட்டை சுப்ரியா கேட்டாலும் அந்த மாமா கொடுக்க மாட்டிக்கிறார். கணவனுக்கு சர்ஜரி செய்த ஹாஸ்பிட்டலுக்கு, சுப்ரியா தனது அப்பாவை அழைத்துகொண்டு சர்ஜரி குறித்த விவரங்களை மருத்துவரிடம் கேட்கிறாள். பையனுடைய ஜெனிட்டலில் பிரச்சனை இருப்பதால் அவனால் திருமணம் செய்ய முடியாது, சர்ஜரி செய்து இந்த பிரச்சனையை சரிசெய்த பின் திருமணம் செய்துகொள்ளலாம் என மருத்துவர் சொல்கிறார். இந்த விஷயத்தை சொல்லாமல் திருமணம் செய்துவிட்டார் என்று அதை கேட்டு சுப்ரியாவும் அவளது அப்பாவும் அதிர்ச்சியடைகிறார்கள்.
அதன் பின்னர், சுப்ரியா குடியிருந்த வீட்டை பூட்டி சாவியை பையனுடைய வீட்டார் எடுத்துக்கொள்ள அதை அவள் கேட்டாலும் கொடுப்பதில்லை. பையனையும் சுப்ரியாவுக்கு காட்டுவதில்லை. கோபமடைந்த சுப்ரியா மாமியார் வீட்டிற்கு சென்று சாவியை கேட்ட பின், சிறிது நேரம் கழித்து பையனுடைய மாமா அந்த சாவியை கொடுக்கிறார். பையனை காட்ட சொன்னாலும், ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து அந்த மாமா காட்ட மறுக்கிறார். இதற்கிடையில், சுப்ரியா தனது வீட்டை திறந்து பார்த்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எதுவும் இல்லை. இது குறித்து தன் அப்பாவிடம் கூறி வரவழைக்கிறாள். அப்போது தான், பையனுக்கு ஜெனிட்டலில் சர்ஜரி செய்திருக்கிறார்கள் என்பதும் அவனால் உடனடியாக உறவு வைத்துக்கொள்ள முடியாது என்பதும் தெரிய வருகிறது. ஒரு மாதத்திற்குள் பையனை உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று பையனுடைய வீட்டார் சொல்ல அதை கேட்டு சுப்ரியாவும் அவளது அப்பாவும் டெல்லிக்கு செல்கிறார்கள். அதன் பின் 10 நாள் கழித்து, சுப்ரியா தன்னுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டாள், எங்களுக்குள் தாம்பத்தியம் நடக்கவில்லை. அதனால் இந்த திருமணம் செல்லாது என பையனிடம் இருந்து சுப்ரியாவுக்கு நோட்டீஸ் வருகிறது. நன்றாக பழகி புரிந்துக்கொண்ட பின் உறவு வைத்துக்கொள்ளலாம் என சுப்ரியா ஏற்கெனவே அனுப்பிய மெசேஜை வைத்து இந்த நல் அண்ட் வாய்ட் என்ற நோட்டீஸை அனுப்பியிருக்கிறான்.
அப்போது தான் சுப்ரியா டெல்லியில் இருந்து என்னை பார்த்து விஷயத்தை சொன்னார். வழக்கு முடிய நிறைய காலம் பிடிக்கும் என்பதால் இங்கேயே அந்த பெண் தங்கியிருக்க முடியாது என்று எண்ணி அந்த பெண்ணை டெல்லி கோர்ட்டில் பையன் பேரில் டொமெஸ்டிக் வைலன்ஸ் வழக்கு ஒன்றை போட சொன்னேன். அதன்படி, அங்கு அவள் வழக்கு தொடர்ந்தாள். அங்கும் அவர்கள் இங்கு சொன்ன அதே பொய்யை தான் கூறுகிறார்கள். தன்னுடைய உடல்நலக்குறைப்பாடுகளை பற்றி மறைத்து இந்த திருமணம் நடந்திருக்கிறது. மனைவி இருக்கும் போது வேறு ஒருவருடன் சென்று சர்ஜரி நடந்திருக்கிறது என்று சப்ரஷன் ஆஃப் மெட்டீரியல் ஃபேக்ட் என்ற கேஸை போடுகிறாள். அதன்பிறகு, அந்த ஹாஸ்பிட்டல் மீது சுபினா கேஸ் போட்டு சர்ஜரி செய்த ரிப்போர்ட்களை வாங்கினோம். அதன் பிறகு நடந்த விசாரணையில், சுப்ரியாவுடன் வாழ முடியாது என டைவர்ஸ் கேஸ் போட்டான். பெண்ணுடைய அப்பாவும், மீயூட்ச்சுவல் கன்செண்ட்டில் டைவர்ஸ் போட்டால், சுப்ரியாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். அவர்கள் ஆரம்பத்தில் முடியாது என்ற சொன்ன பின், டெல்லி சாக்கேத் நீதிமன்றத்தில் மீடியேசனுக்கு அனுப்பினார்கள். கடைசியாக சுப்ரியாவுக்கு நஷ்ட ஈடாக 33 லட்ச ரூபாய் கொடுத்த பின் சென்னை நீதிமன்றத்தில் மீயுட்ச்சுவல் கன்செண்ட்டில் இருவருக்கும் விவகாரத்து ஆனது.