Skip to main content

அசத்தும் தமிழர்... கிரிக்கெட்டின் இன்னொரு சச்சின்...

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் பிரபலமான கிரிக்கெட் ஜாம்பவான். உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். இந்திய ஆண்கள் கிரிக்கெட்டையும், உலக கிரிக்கெட்டையும் அதன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்.  ஆண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, அவருக்கு இணை அவர்தான். மகளிர் கிரிக்கெட்டிலும் இப்படி ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் மித்தாலி ராஜ். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்.

 

 

mm

 

14 வயதில் 1997 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் இறுதியாகப் பங்கேற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 1999-ல் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தான் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக 114* ரன்கள் குவித்து, தனது கிரிக்கெட் பயணத்தைச் சாதனையுடன் தொடங்கினார். 19 வயதில் தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 214  ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதனைகள் படைத்தார்.

 

ஒன்று இரண்டல்ல. அவர் படைத்த சாதனைகள் ஏராளம். 1999 முதல் தேசிய அணியில் உள்ள இவர், இன்றும் இந்திய அணியின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரம். கிட்டத்தட்ட 20  ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் கிரிக்கெட் விளையாடி வருபவர். இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ். இவர் 19 வருடங்கள் (1997-2016) சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்றவர்.

 

mmm

 

அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பெருமையும் மித்தாலி ராஜ்க்கு உண்டு. இதுவரை 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6550 ரன்கள் எடுத்து, உலக அரங்கில் அதிக ரன்கள் எடுத்த மகளிர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5992 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் 7 சதங்கள், 51 அரை சதங்கள் அடித்துள்ளார். 50 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து சாதனை புரிந்துள்ளார். பேட்டிங் சராசரி 51.17.

 

10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி ராஜ், 1 சதம், 4 அரைசதம் உட்பட 663 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 51. 85 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 2283 ரன்கள் அடித்துள்ளார். இதில் 17 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 37. டி20-ல் அதிக பேட்டிங் சராசரி கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். 

 

mm

 

 

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரின் சிறப்பையும் வெளிபடுத்தியவர் மித்தாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிகம் பிரபலமான வீரர் மித்தாலி ராஜ். லேடி கிரிக்கெட்டின் சச்சின் எனப் போற்றபடுபவர். இதுவரை ஐந்து ஒருநாள் உலககோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஆகவும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். 2005 உலககோப்பை போட்டிகளில் இறுதி போட்டிவரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர். இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை வென்றது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாக உள்ளது. 2016-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 தொடரைக் கைபற்றித் தனது சிறந்த கேப்டன்ஷிப் திறமைகளை வெளிபடுத்தினார்.

 

6 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜ் 3 வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ளார். அதிக வெற்றி சதவீதம் உள்ள இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன். 3 டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே இந்திய டெஸ்ட் கேப்டன் இவர். 76 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றி 42 வெற்றிகளைத் தந்துள்ளார். வெற்றி சதவீதம் 57. 


2003-ல் அர்ஜுனா விருதும், 2015-ல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். பி.பி.சி.-ன் உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் 2017 ஆம் ஆண்டு இவர் இடம் பிடித்தார். மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமாக்க ஏற்பாடுகள் நடந்து வருவது குறிபிடத்தக்கது. நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறை பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த ரோல் மாடலாக உள்ளார்.  

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

மகளிர் டி20 உலகக் கோப்பை; இந்திய அணி அறிவிப்பு

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Women's T20 World Cup; Indian team announcement

 

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் இந்தியா பிரிவு ‘பி’ யில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.   

 

கொரோனாவிற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. மூன்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் நடக்க உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன் பிரீத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில், “ஹர்மன் பிரீத்கர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், செஃபாலி வர்மா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா,ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், ரேனுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்தர்கார், ஷிகா பாண்டே” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.