“இந்தியா, ஒருவரை ஹீரோவாக கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்” என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர், “கோலி சமீபத்தில் சதம் அடித்தபோது அவரை நாடே கொண்டாடியது. அதே போட்டியில் சிறிய நகரமான மீரட்டில் இருந்து வந்த இளம் வீரர் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை எடுத்தார். ஆனால், கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி பேசவில்லை. கோலி சதத்தை மட்டும் தான் நாடே கொண்டாடியது. ஹீரோவாக ஒருவரை கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும்.
ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அதுதான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது” எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன் டி20 உலகக் கோப்பைக்கான தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வானதிற்கு, “10 முதல் 12 பந்துகள் மட்டுமே ஆடும் ஒருவரை எப்படி தேர்வு செய்யலாம். எந்த இடத்தில் இறங்கினாலும் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் மட்டுமே அணியில் இருக்க வேண்டியவர்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.