இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாகிஸ்தானின் மூத்த வீரரான ஷோயப் மாலிக்கின் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வாசிம் அக்ரம் பதிலளித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஷோயப் மாலிக்கிற்கு ஃபேர்வெல் போட்டிக்கு வாய்ப்பளிக்கப்படுமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மாலிக் பாகிஸ்தான் அணிக்காக நிறைய செய்துள்ளார். ஆனால் இந்த உலகக்கோப்பையுடன் அவர் ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. பிறகு அவருக்கு எப்படி வாய்ப்பு தர முடியும். அவருக்கு வாய்ப்பு தருவதற்கு இது ஒன்றும் கிளப் மேட்ச் கிடையாது. வேண்டுமென்றால் ஃபேர்வெல் போட்டிக்கு பதிலாக, ஃபேர்வெல் விருந்து கொடுத்து அவரை வழியனுப்பி வைப்போம்" என கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.