Skip to main content

அதிக விக்கெட் வீழ்த்திய வீரப்பிரதாபர்கள்!

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
அதிக விக்கெட் வீழ்த்திய வீரப்பிரதாபர்கள்!

கிரிக்கெட் விளையாட்டில் அதிக விக்கெட் எடுத்த 10 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருக்கிறார்.

முதல் மூன்று இடத்தில் இரண்டை லெக் ஸ்பின்னர்களும், ஒரு இடத்தை ஆஃப் ஸ்பின்னரும் பெற்றுள்ளனர்.

மிக வேகமாக, அதிலும் குறைந்த மேட்ச்சுகளில் விளையாடி 400 விக்கெட்டை வீழ்த்தியவர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான சர் ரிச்சர்டு ஹாட்லீ. இவர், 86 மேட்சுகளில் விளையாடி, 431 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனையை வீழ்த்தி கொஞ்சகாலம் முதலிடத்தில் இருந்தார் இந்திய வீரர் கபில்தேவ்.

சரி, முதல் பத்து வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்...



1. இலங்கையின் முத்தையா முரளிதரன் 133 மேட்ச்சுகளில் விளையாடி, சராசரியாக 22.72 ரன்களை மட்டும் கொடுத்து 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.



2. ஆஸ்திரேலிய வீரரான ஷான் வார்னே 145 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 25.41 ரன்களை கொடுத்து 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.



3. இந்திய வீரரான அனில் கும்ப்ளே 132 மேட்ச்சுகளில் விளையாடி, சராசரியாக 29.65 ரன்களைக் கொடுத்து 619 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.



4. ஆஸ்திரேலிய வீரரான க்ளென் மெக்ராத் 124 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 21.64 ரன்களைக் கொடுத்து 563 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காவது இடத்தில் இருக்கிறார்.



5. மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான கோர்ட்டி வால்ஷ் 132 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 24.44 ரன்களைக் கொடுத்து 519 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.



6. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 129 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 27.61 ரன்களைக் கொடுத்து 501 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறாவது இடத்தில் இருக்கிறார்.



7. இந்திய வீரரான கபில்தேவ் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் 131 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 29.64 ரன்களைக் கொடுத்து 434 விக்கெட்டுகளை வீழ்த்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.



8. மிகக் குறைவான மேட்ச்சுகளில் விளையாடி மிக வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் நியூஸிலாந்து அணியின் சர் ரிச்சர்ட் ஹாட்லீ. இவர் 86 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 22.29 ரன்களைக் கொடு்தது 431 விக்கெட்டுகளை வீழ்த்தி எட்டாவது இடத்தில் இருக்கிறார்.



9. தென்னாப்பிரிக்க அணி வீரரான ஷான் பொல்லாக் 108 மேட்ச்சுகளில் விளையாடி சராசரியாக 23.11 ரன்களைக் கொடுத்து, 421 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.



10. இன்னொரு தென்னாப்பிரிக்க வீரரான டேல் ஸ்டேன் 85 மேட்ச்சுகளில் விளையாடி, சராசரியாக 22.30 ரன்களைக் கொடுத்து 417 விக்கெட்டுகளை வீழ்த்தி பத்தாவது இடத்தில் இருக்கிறார்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்