தேர்வுக்குழுவில் தலையிட்டு பதவி பறிபோகக் காரணமாக தான் காரணமாக இருந்ததாக வெங்சர்கார் சொல்வதில் துளியும் உண்மையில்லை என ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத்தை அணியில் சேர்க்க ஸ்ரீநிவாசன் நினைத்ததாகவும், அதற்கு தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டென் ஆகியோர் உதவியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், அவர்களது எண்ணத்தைப் பொய்யாக்கும்படி தாம் விராட் கோலியைத் தேர்வு செய்ததால் தனது தலைவர் பதவி பறிபோனது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ முன்னாள் பொருளாளர் ஸ்ரீநிவாசன், ‘அவர் யாருக்கு சார்பாக பேசிக்கொண்டிருக்கிறார். அவரது நோக்கம் என்ன? அது என்னவாக இருந்தாலும் அதில் துளியளவும் உண்மையில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி பேசுவது நல்லதற்கல்ல. அவரது பதவி பறிபோனதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ என கோபமாக பேசியுள்ளார்.
மேலும், ‘வெங்சர்காரை ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் நான் பெரிதும் மதிக்கிறேன். அவரை இந்தியாவின் ஹீரோ என்று நான் பெருமைப்படுத்தி யிருக்கிறேன். அவர் இப்படியெல்லாம் பேசியதற்கு வருந்துகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.