100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார் அமெரிக்க வீராங்கணை டோரி
உலக சாம்பியன்சிப் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கணைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்தநிலையில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க வீராங்கணை டோரி 10 புள்ளி 85 வினாடிகளின் இலக்கை கடந்து தங்க பதக்கத்தை கைபற்றியுள்ளார்.