காணாமல் போன பிரபல செய்தி வாசிப்பாளர் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
2018ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி காணாமல் போன பிரபல செய்தி வாசிப்பாளரான சல்மா சுல்தானாவை கண்டிபிடிக்க கேரளாவைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராபின்சன் குரியா தீவிர முயற்சியில் இறங்குகிறார். சல்மா பேங்கில் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கிருப்பதையும், அந்த பணத்தை யாரோ இன்னுமும் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சல்மாவினுடைய செல்போனை எடுத்து யாருடன் பேசியிருக்கிறார் என்ற பட்டியலை எடுக்கிறார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
அந்த பட்டியலில், சல்மாவோடு பணிபுரிந்த மகேஷ் சாஹு என்ற நபருடன் தான் சல்மா அடிக்கடி பேசியிருக்கிறார் என்ற தகவலை வைத்து அவரை விசாரித்ததில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மகேஷை கடுமையாக விசாரிக்கிறார்கள். ஒரு பக்கம் இது நடக்க மறுபக்கம் மகேஷின் நண்பர்களையும், அவரது போனையும் எடுத்து விசாரித்ததில், அதுல் ஷர்மா மற்றும் கெளஷிக் ஆகியோர் தான் மகேஷுக்கு நெருங்கிய நண்பர்கள் எனக் கண்டுபிடிக்கிறார்கள். மூன்று பேரையும் கடுமையாக விசாரித்ததில், ஒரு கட்டத்தில் ஒருவர் உண்மையை ஒப்புக்கொள்கிறார். மகேஷும், சல்மாவும் திருமணம் செய்துகொள்ளாமல் கோர்பா மாவட்டத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மகேஷுக்கு தொழில் ஆரம்பிப்பதற்காக தான் சல்மா பேங்கில் 7 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார். அதன்படி, மகேஷ் தொழிலை நடத்தி வந்துள்ளார். தினமும் காலை வீட்டை வெளியேறிய சல்மா, தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு கோர்பாவில் எடுத்திருந்த ரூம்மில் தங்கிவிட்டு மாலை நேரத்தில் தன்னுடைய வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சல்மா.
ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள மகேஷ், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய வீட்டுக்கு செல்வதால் சல்மாவுக்கு சந்தேகம் வந்து மகேஷின் செல்போனை எடுத்து செக் செய்து அடிக்கை அவனோடு சண்டை போடுகிறாள். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, சல்மாவுக்கும் மகேஷுக்கும் இடையே பெரிய சண்டை வருகிறது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், சல்மாவின் துப்பட்டாவை எடுத்து அவளின் கழுத்தை நெறித்ததில், சம்பவ இடத்திலேயே சல்மாவின் உயிர் போகிறது. இதில் அதிர்ச்சியடைந்த மகேஷ் தன்னுடைய நண்பர்களான அதுல் ஷர்மாவையும், கெளஷிக்கையும் வீட்டுக்கு அழைத்து, மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் போல் புதிதாக சாலை போடப்பட்டிருந்த ஜல்லியை எடுத்து ஆழமாக தோண்டி சல்மாவின் பிணத்தை வைத்துவிட்டு பின் ஜல்லியை மூடினால் அடுத்த நாள் காலை சாலை போட்டுவிடுவார்கள். சல்மாவின் பிணம் இங்கிருப்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்ற ஐடியாவை கொடுக்கிறான். அதன்படி, இரவோடு இரவாக தரையை தோண்டி சல்மாவின் பிணத்தை வைத்துவிட்டு மேல் மணலை போட்டு பழையபடி வைத்துவிடுகிறார்கள். அடுத்த நாள், அந்த இடத்தில் சாலை போட்டுவிடுகிறார்கள். ஏராளமான வாகனங்கள், அந்த சாலையில் ஓடியுள்ளது. மேலும், ஐந்து வருடங்கள் ஆகியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாததால் நாம் தப்பித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்ற உண்மையை சொல்கிறான்.
இதைபற்றி மகேஷிடம் விசாரிக்கையில், கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டு, சல்மாவின் உடலை எங்கு புதைத்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறான். அந்த உண்மையை மூன்று பேரும் தனித்தனியாக ஒப்புக்கொள்கிறார்கள். சல்மாவின் உடலை புதைத்த இடத்திற்கு அருகில் ஒரு மரம் இருந்ததாக அவர்கள் சொன்னதுபடி, அந்த மரத்தை தேடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராபின்சன் குரியா தேடுகிறார். ஆனால், அவர்கள் புதைத்த போது இருந்த ஒற்றை பாதை, இப்போது நாற்கரச் சாலையாக மாறியதால் அந்த மரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. முயற்சியை இழக்காத ராபின்சன், பி.டபுள்யு.டி ஆபிஸிற்கு சென்று சாலை போடப்பட்டிருந்த பழைய படங்களை எல்லாம் தேடியதில் அந்த மரம் இருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார். மரம் இருந்ததை கண்டுபிடித்தாலும் எந்த இடத்தில் புதைத்தார்கள் என்பது தெரியாததால், தெர்மல் இமேஜ்ஜிங், சாட்டிலைட் மேப்பிங், கிரெளண்ட் லெவல் பெனிட்ரேஷன் ஆகிய கருவிகளை கொண்டு சோதனை செய்ததில், அவர்கள் மூன்று பேரும் சிறிய சதுரத்தில் நடமாடிருக்க வேண்டும் என்பதையும், அந்த இடத்தில் ஒரு அந்நிய பொருள் இருப்பதையும் சந்தேகிக்கிறார். அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி, அந்த இடத்தை தோண்டி பார்த்ததில் ஒரு எழும்பு கூடு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பழைய செருப்பு, தலைமுடி, ஹேண்ட் பேக் இதுமாதிரியான பொருட்கள் கிடைக்கிறது.
செருப்பு, தலைமுடி என எல்லாவற்றையும் சல்மா உபயோகித்த பொருட்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் அனைத்தும் ஒத்துப்போகிறது. எழும்பு கூட்டையும், சல்மாவின் அம்மாவினுடைய டி.என்.ஏ செக் செய்து மருத்துவ சான்றிதழ் வாங்கியதில் இரண்டுமே ஒன்று தான் எனத் தெரியவருகிறது. கடைசியில் புதைக்கப்பட்ட உடல், சல்மாவினுடைய உடல் தான் காவல்துறைக்கு தெரியவருகிறது. மகேஷ் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு, அந்த வாக்குமூலம் மேஜிஸ்ரேட் முன்னால் பதிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மகேஷ் தான் அந்த கொலையை செய்தான் என்று நிரூபனமாகிறது. சிவில் இஞ்சினியரான கூடுதல் கண்காணிப்பாளர், ராபின்சன் குரியாவின் தீராத முயற்சியாலும், யாரும் பயன்படுத்தாத விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்ததால், அவரை பாராட்டி ‘வந்தனா மல்லிக்’ விருது தரப்பட்டது.