ipl cricket match delhi capitals won for 7 wickets

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (29/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களைச் சேர்த்தது.

Advertisment

ipl cricket match delhi capitals won for 7 wickets

அதைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக, சுப்மன் கில் 43, ரஸ்ஸல் 45 ரன்களை எடுத்தனர். அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 82 ரன்களையும், ஷிகர் தவான் 46 ரன்களையும் குவித்தனர். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.