Skip to main content

அடிச்சா சிக்ஸ்... எடுத்தா விக்கெட்... ரசிகர்களை கவர்ந்த டி10 கிரிக்கெட்!

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
t10


டெஸ்ட் போட்டிகளில் மெக்ராத், ஸ்டெய்ன் போன்ற பவுலர்களை கதிகலங்க வைத்தவர்கள் டிராவிட், லக்ஸ்மன்.  ஒருநாள் போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைத்தவர்கள் சச்சினும் கோலியும். டி20 ஸ்பெஷலிஸ்ட் என்றால் சுரேஷ் ரெய்னா. இப்படி ஒவ்வொரு விதமான போட்டிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. இப்போது டி10 என்ற புதுவகை பத்து ஓவர் போட்டிகள் பிரபலமாக தொடங்கியுள்ளன. இந்தவகை போட்டிகளிலும் இந்திய அணி ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
 

2006-ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. ஆனால் அதற்கு பிறகு வந்த டி20 கிரிக்கெட் ரசிகர்களை கவர தொடங்கியது. கிட்டத்தட்ட இந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது டி20 கிரிக்கெட். இந்த நிலையில் 90 நிமிடங்கள் மட்டுமே நடக்கும் டி10 போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கியுள்ளன.
 

2017-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டி10 தொடரில்ஆசியாவை சேர்ந்த 6 உள்ளூர்அணிகள் பங்கேற்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த ஆண்டு 12 நாட்கள் நடைபெற்ற தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஜாகிர் கான், ஆர்.பி.சிங், முனாப் படேல், ஐ.பி.எல்.லில் கலக்கிய பிரவீன் தாம்பே ஆகியோர் இந்த தொடரில் விளையாடினார்கள்.
 


அப்ரிடி, மெக்கல்லம், கெய்ல், பிராவோ, சுனில்நரைன், மோர்கன், ரஷித் கான், வாட்சன் போன்ற சர்வதேச நட்சத்திர வீரர்களும் பங்குகொண்டனர். நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நார்த்தர்ன் வாரியர்ஸ், பக்டூன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய நார்த்தர்ன் வாரியர்ஸ் 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பக்டூன்ஸ்அணி 7 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டேரன் சமி தலைமையிலான  நார்த்தர்ன் வாரியர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
 

t10


பல நாடுகளில் இருந்த பிரபலமான வீரர்கள் பங்குபெற்றாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் அசத்தினர். இந்த தொடரை வென்ற நார்த்தர்ன் வாரியர்ஸ் அணியின்16 பேரில் மொத்தம் 8 பேர் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேர் பட்டியலில் 4 பேர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். 9 போட்டிகளில் 324 ரன்கள் எடுத்து முதல் இடத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் பிடித்தார். 304 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ளட்சர் பிடித்தார். பவுலிங்கிலும் முதல் பத்து இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ மற்றும் ரஸல் உள்ளனர்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் டி20 போட்டிகளை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ்தான் பெஸ்ட் என சொல்லலாம். வெஸ்ட் இண்டீஸ் இரண்டு முறை டி20 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள்தான் முதல் சாய்ஸ். அந்த அளவிற்கு அவர்கள் டி20 போட்டிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
 

ஆப்கானிஸ்தான் அணியின் சிக்ஸர் மன்னன் சசாய், சபிகுல்லா சபிக், நஜிபுல்லா ஜாட்ரன், முஹமது சசாத், முஹமது நபிஆகியோர் இந்த டி10 தொடரில் பேட்டிங்கில் அசத்தினர். சர்வதேச போட்டிகளில் சிறிது சிறிதாக முன்னேறிவரும் ஆப்கானிஸ்தான் அணி விரைவில் பெரிய அணிகளுக்கு வலுவான போட்டியை அளிக்கும் அளவிற்கு வீரர்களை தயார்படுத்தி வருகிறது. பல நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது.
 

காலம் மாற மாற விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மாறுகிறது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ், விக்கெட் என 90 நிமிடமும் டி10 போட்டிகளில் பரபரப்பு அதிகமாக உள்ளது. குறைந்த நேரம் மட்டுமே நடைபெறுவதால் டி10 போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும், சில நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிரபலமாக உள்ளது.கிரிக்கெட்டை மற்ற நாடுகளிலும் பிரபலபடுத்த  டி10 உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.