இந்தியா - இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று மாலை முதல் தொடங்குகிறது.

நிதிஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இலங்கை சென்றுள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு பிரேமதாஸா மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையே நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் ஆகிய நால்வர் மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்களாக இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளனர். இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வருகிற மார்ச் 18ஆம் தேதி நடைபெறும்.
இலங்கையில் உள்ள கண்டியில் கலவரம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்தநிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என அந்நாட்டு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.