சோயிப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர். களத்திலே அவரது பந்தின் வேகத்தை விட ஆக்ரோஷமும், முரட்டுக்குணமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் போது களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் அனல் பறக்கும். தற்போது சோயிப் அக்தர் ஒரு பேட்டியில் தன்னுடைய கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் பேசும் பொழுது, "யுவராஜ்சிங் மற்றும் ஹர்பஜன்சிங்குடன் ரெஸ்லிங்கெல்லாம் விளையாடி இருக்கிறேன். அப்போது விளையாட்டுத்தனமாக நான் செய்வது மற்றவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்தி விடும். என்னுடைய அணியினரே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் ரெஸ்லிங் செய்யமாட்டேன். இது என்னுடைய அன்பை வெளிக்காட்டும் முறை. சில நேரங்களில் இதில் எல்லை மீறிவிடுவேன். யுவராஜ்சிங்கை கட்டி அணைக்கும் போது அவரது முதுகெலும்பை உடைத்திருக்கிறேன். இதேபோல் அஃப்ரிடிக்கும் ஒரு முறை செய்தேன். என்னுடைய அன்பை வெளிபடுத்தும் முறை கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். என்னுடைய இளமைக் காலங்களில் நான் இப்படித்தான் இருந்தேன்" எனக் கூறினார்.