Published on 17/12/2021 | Edited on 17/12/2021

இணைய அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான யுகோவ், வெளியிட்டுள்ள உலகில் அதிகம் போற்றப்படும் மனிதர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 12வது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்த பட்டியலில் சச்சினுக்கு பின்னால் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.