Published on 03/08/2020 | Edited on 03/08/2020

உலகின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையைப் பெற்ற புகாட்டி லா வொய்சர் நொய்ர் காரை வாங்கியுள்ளார் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
பிரபல கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ, கால்பந்தைக் கடந்து தனது கார் கலெக்ஷனுக்காகவும் பிரபலமானவர். கார் பிரியரான இவர், அவ்வப்போது பல விலையுயர்ந்த சொகுசுக் கார்களை வாங்குவது என்பது வடிக்கையானதே. ஆனால் இம்முறை, இத்தாலி சீரி ஏ கால்பந்து தொடரில் 36ஆவது முறையாக அவரின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் விதமாக, உலகின் மிகவும் அரிதான மற்றும் விலை உயர்ந்ததுமான புகாட்டி லா காரை முன்பதிவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.75 கோடி ரூபாய் வரும் இந்த கார், இதுவரை மொத்தமாக 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.