Skip to main content

மனதளவில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டேன்! - லசித் மலிங்கா உருக்கம்

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மனதளவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

malinga


முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் கலந்துகொண்ட ஐஸ் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான லசித் மலிங்காவும் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘நான் மனதளவில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்டேன். இனி சர்வதேச போட்டிகளில் விளையாடும் எண்ணமில்லை. விரைவில் என் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். இதை இலங்கை கிரிக்கெட் கவுன்சிலில் அறிவிக்கவில்லை. அங்கு சென்று என் உடல் மற்றும் மனத்தகுதி குறித்து அறிந்த பின் சரியான முடிவை எடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த லசித் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்கான ஏலத்தில் மலிங்காவை எந்த அணியும் எடுக்கவில்லை. இதுவே, அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். 
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அணியின் எதிர்காலத்திற்காக தம்மை மும்பை அணி புறக்கணித்திருப்பதாகவும், அந்த அணியின் பந்துவீச்சுப் பிரிவின் வழிகாட்டியாக தான் செயல்படுவேன் என்றும் அவர் அப்போது கூறினார்.