Published on 15/08/2020 | Edited on 15/08/2020

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.