Skip to main content

'20 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்ற பிரிவில் இந்தியா' - எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க டோக்கியோ2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். அதில் பலர் தேர்ச்சியும் பெற்றனர். 

 

Fouaad mirza-Tokyo2020

 

இதில் குறிப்பிடும் விதமாக இந்தியாவின் நட்சத்திர குதிரையேற்ற வீரரான ஃபௌவுட் மிர்சா தகுதி பெற்றிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு குதிரையேற்ற பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளார் என்பதுதான். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா குதிரையேற்ற பிரிவில் சாதனை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையில் விளையாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.