நேற்று முன்தினம் சென்னை, டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை வீரர் ரெய்னா, தோனி அணியில் இடம்பெறாமல் இருக்கும் போது எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு கேப்டனாக அவரை இழப்பது பிரச்சினை அல்ல. ஆனால் அதனையும் தாண்டி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அணி அவரை மிகவும் மிஸ் செய்யும். அப்போது நிலைமை மிகவும் கடினமாகி விடுகிறது. அதை நீங்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின் போது பார்த்து இருப்பீர்கள். அவர் களம் இறங்கும் போது எதிரணிக்கு நிறைய நெருக்கடிகள் உருவாகும். ஆனால் அவர் இல்லாதபோது அதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர் விரும்பும் வரை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டனாக அவர் நீடிக்க வேண்டும்" என்றார்.