இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது. அதில் இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கருணரத்னே பேட்டிங் ஆடும்போது, பேட் கமின்ஸ் போட்ட பவுன்சர் பந்து அவரது பின்னங்கழுத்தில் பட்டதில் அதே இடத்தில் விழுந்தார். கீழே விழுந்தவருக்கு மருத்துவ உதவி செய்ய இலங்கை அணியின் பிஸியோ, மற்ற வீரர்கள் மைதானத்திற்குள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு அடி பலமாக விழுந்திருக்கிறது என்பதால், ஸ்ட்ரெச்சர் வரவழைத்து மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வந்த அறிவிப்பில், கருணரத்னேவுக்கு அடி பலமாக விழுகவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கருணரத்னே இன்று தன்னுடைய 58வது டெஸ்ட் போட்டியை விளையாடினார். அவர் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கமின்ஸ் போட்ட 146 கிமீ வேகப்பந்தை பின்னங் கழுத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.