ஐபிஎல் 2024 இல் 11 ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக டி.காக் மற்றும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 15 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த படிக்கல்லும் 9 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, டி. காக் அதிரடியாக அடித்துச் சதமடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிரங்கிய நிக்கோலஸ் பூரன் 42(21), குருணால் பாண்டியா43(21) எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தனர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தவானும், பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்த 102 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழக்க மறுமுனையில் தவான் நின்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாகப் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.