Skip to main content

இந்தியா அபார வெற்றி

Published on 04/09/2017 | Edited on 04/09/2017


இந்தியா அபார வெற்றி
 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பாப் டு பிளிஸ்சிஸ் 78 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், டுமினி 59 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தனர்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சப்பதான் 50 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன்களும், சுரேஷ் ரெய்னா 37 ரன்களும் எடுத்தனர். ஹர்பஜன்சிங் 25 பந்துகளில் 2 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை.

பந்து வீச்சில் மோர்னே மோர்க்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சார்ந்த செய்திகள்