இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் 87 வயதான சாருலதா பாட்டி.
போட்டி முழுவதும் முன்வரிசையில் அமர்ந்து இந்திய அணியை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். இதனையயடுத்து முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடங்குவதற்கு முன், இடைவேளையில் சாருலதா பாட்டியை கோலி சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதோடு, அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ரோஹித் சர்மாவும் அவரை சந்தித்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பின் போது அடுத்த இரண்டு ஆட்டங்களுக்கான டிக்கெட்டை கோலி தானே வழங்குவதாக அந்த பாட்டியிடம் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை நிறைவேற்றும் விதமாக டிக்கெட்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த பாட்டியின் பேத்தியான அஞ்சலி கூறுகையில், "கோலி கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார். அவர் கூறியதுபோல இலங்கை மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை அவர் அனுப்பி வைத்துள்ளார்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.