Skip to main content

தொடரும் கோலியின் மோசமான உலகக்கோப்பை வரலாறு... புலம்பும் ரசிகர்கள்...

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

 

kohli in previous worldcup semifinal stats

 

 

நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 47 ஆவது ஓவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் டே விதிப்படி நேற்று கைவிடப்பட்ட இடத்திலிருந்து, இன்று மதியம் முதல் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் அடித்தது.

240 என்ற வெற்றி இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் 5 ரன்களை சேர்ப்பதற்கு முன்னரே முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல், ரோஹித், கோலி ஆகியோர்  ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஏற்கனவே கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலி 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் தான் எடுத்தார். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் கோலி 1 ரன்னில் அவுட் ஆன நிலையில், உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் அவரது சராசரி வெறும் 3.67 ரன்கள் என பதிவாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலிக்கு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மட்டும் ராசியே இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.