இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஜடேஜாவுக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தசை நார் கிழிந்து காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர், தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்தநிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் ஒருவேளை ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அவர் மீண்டும் விளையாட 4 முதல் ஆறு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரன், ஜடேஜா ஒருநாள், இருபது ஓவர், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதால், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம் என அவரின் சக வீரர் ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஆல்-ரவுண்டராக கலக்கி வரும் ஜடேஜா டெஸ்ட்டில் ஓய்வுபெற்றால், அது இந்திய அணிக்கு குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் விளையாடுகையில் பெரும் பின்னடைவாக இருக்கும்.