Skip to main content

மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்குமா ஐதராபாத்? - ஐ.பி.எல். போட்டி #16

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

ஐ.பி.எல். சீசன் 11ன் 16ஆவது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசெர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி, மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

 

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஆடிய மூன்று போட்டிகளிலும் தோற்காத ஒரே அணி சன்ரைசெர்ஸ் ஐதராபாத் தான். இதுவரை மூன்று போட்டிகளில் களமிறங்கிய அந்த அணி, மிக சிறப்பாக விளையாடி சுலபமாக வெற்றிகளைப் பதிவு செய்தது. கடந்த சீசன்களில் வார்னரின் பக்கபலமான ஆட்டம் இந்த சீசனில் இல்லாதது, ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சொல்லப்பட்ட நிலையில், அது அவ்வளவு பெரிய குறையாக தெரியவில்லை என்பதுபோல் இருக்கிறது அந்த அணியின் ஆட்டம். ஷகிப் அல் ஹாசன் மற்றும் ரசித் கான் சுழலில் மிரட்டுகின்றனர். 

 

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை அந்த அணிக்கு இது நான்காவது ஆட்டம். கடைசியாக சென்னை அணியுடன் மோதியபோது, நூலிழையில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. முஜூப் உர் ரகுமான் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். மூன்று போட்டிகளுக்குப் பின்னரும் யுவ்ராஜ் சிங் ஃபார்முக்குத் திரும்பாமல் ஏமாற்றுகிறார். கடந்த போட்டியில் சென்னை அணியை மிரள வைத்த கிறிஸ் கெயில் இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஐதராபாத் அணியை தொடர் வெற்றிகளில் இருந்து கொஞ்சம் நிறுத்திவைத்து முன்னேறலாம். அதேசமயம், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் ஐதராபாத் அணி மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும்.

Next Story

ஐபிஎல் சூதாட்டத்தால் பலியான கோவை இளைஞர்!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Coimbatore youth passed away by IPL gambling


ஐபிஎஸ் சூதாட்டத்தில் பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம். 35 வயதான இவர், கார் டீலர் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சபாநாயகம் கடந்த 14 ஆம் தேதியன்று கோவைக்கு தன்னுடைய தொழில் சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது, தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சபாநாயகத்தின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.

 

அதன்பிறகு சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையின் பாத்ரூமில் சபாநாயகம் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சபாநாயகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, சபாநாயகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் சபாநாயகத்தின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

 

அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சபாநாயகம், அதில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்பதும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த தற்கொலை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

First win for Chennai Super Kings!

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் (Dr DY Patil Sports Academy) இன்று (12/04/2022) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. 

 

பின்னர், 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.