இந்திய கிரிக்கெட்டின் 'கூல்' கேப்டன் தோனி களத்தில் இருந்தாலும், இல்லாவிடிலும் இன்றும் அவர்தான் எப்போதும் தலைப்பு செய்தியாக இருக்கிறார்.மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கப் வென்ற ஒரே கேப்டன் என்னும் பெருமை தோனிக்கு உண்டு. இந்த நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி டி20 உலகக்கோப்பை வென்ற வீடியோவை பகிர்ந்துள்ளது. இதுவரை சுமார் 88 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து கம்பீரின் அதிரடியால் 157 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் முதல் டி20 உலக கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது.போட்டிக்குப்பின் கேப்டன் தோனி தனது ஜெர்ஸியைக் கழற்றி சிறுவன் ஒருவனுக்கு அணிவித்து விட்டு,சட்டையின்றி மைதானத்தில் நடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.