உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 268 ரன்கள் அடித்தது. இதில் சிறப்பாக ஆடிய கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 268 ரன்கள் அடித்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய அணி 143 ரங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. கோலி ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களான கோலி மற்றும் முகமது ஷமியின் செயலுக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் காட்ரெல் வழக்கமாக விக்கெட் எடுக்கும்போது சல்யூட் அடித்து கொண்டாடுவார். தான் ராணுவத்தில் பணியாற்றியதை நினைவு கூறும் விதமாகவே அவ்வாறு செய்வதாக காட்ரெல் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காட்ரெல் அவுட் ஆனதும் இந்திய வீரர் ஷமி சல்யூட் அடித்து அவரை கிண்டல் செய்தார்.
அதுபோல வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது விராட் கோலியும் காட்ரெல் சல்யூட்டை கிண்டல் செய்தார். இவர்களின் இந்த செயலுக்கு இந்திய ரசிகர்கள் இணையத்தில் வருத்தம் தெரிவித்தும், மேற்கிந்திய வீரர்களிடம் மன்னிப்பு கேட்டும் பதிவிட்டு வருகின்றனர். ராணுவத்தில் பணியாற்றுவதை அவர் நினைவுகூரும் விதமாக செய்வதை வைத்து அவரை கிண்டல் செய்வது, அந்நாட்டு ராணுவத்தை கிண்டல் செய்வது போலதான் ஆகும்.
நம் நாட்டு ராணுவத்தை எவ்வாறு மதிக்கிறோமோ அதே போல அவர்களையும் மதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்திய ரசிகர்களின் இந்த பதிவுகளை பார்த்த பிரபலங்கள் உட்பட பலரும் இந்திய ரசிகர்களை பாராட்டி வருகின்றனர்.