Skip to main content

இந்திய கிரிக்கெட் அணி விட்கெட்டை பெற முயற்சிப்பேன்: நியூசிலாந்து வீரர் வீச்சாளர் மிட்செல்

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
இந்திய கிரிக்கெட் அணி விட்கெட்டை பெற முயற்சிப்பேன்: 
நியூசிலாந்து வீரர் வீச்சாளர் மிட்செல்

டாட்-பால்களை வீசுவதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி விட்கெட்டை பெற முயற்சிப்பேன் என்று நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது என்பது கடினமான விஷயமாகும் என தெரிவித்தார். சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதில் இந்திய வீரர்கள் கில்லாடிகள் என்று சுட்டிக் காட்டிய மிட்செல், சுழற்பந்து வீச்சை விளையாடியே அவர்கள் வளர்ந்தவர்கள் என கூறினார். டாட்-பால்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தால் சில விக்கெட்டுகளை பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்