இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது இருபது ஓவர் போட்டி நேற்று நடைப்பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. பின்னர், 187 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 174 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.
இந்தியத் தரப்பில் விராட் கோலி மட்டுமே தனி நபராகப் போராடி 61 பந்துகளில், 85 ரன்கள் குவித்தார். ஆனால், அது வெற்றிக்குப் போதவில்லை. இந்த நிலையில், இந்திய அணிக்கு, போட்டி கட்டணத்திலிருந்து, 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டியில், குறித்த நேரத்தில் பந்துவீசி முடிக்காததால், இந்திய அணிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மெதுவாகப் பந்து வீசியதற்காக, இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், மெதுவாகப் பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.