Skip to main content

ஈராக்கைத் தோற்கடித்து சாதனை படைத்த இந்திய அணி!

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

ஈராக் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. 
 

football

 

 

 

மேற்காசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஈராக் மற்றும் இந்திய கால்பந்தாட்ட அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் கைகளே மேலோங்கி இருந்தன. இருப்பினும், இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காமல் இருந்த நிலையில், போட்டி நி்றைவடைய சில நிமிடங்களே இருந்தபோது, இந்திய அணி ஒரேயொரு கோல் அடித்து வெற்றிபெற்றது. 
 

இதன்மூலம், 1 - 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஈராக் அணிக்கு எதிராக எல்லா வயதுக்குழுக்கள், பிரிவுகளிலும் இந்திய கால்பந்தாட்ட அணி வெற்றிபெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றி குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் பிபியானோ ஃபெர்னாண்டஸ் பேசுகையில், முந்தைய போட்டிகளில் அணியின் செயல்பாட்டில் இருந்த திடத்தன்மை, தனது நம்பிக்கையை மேலும் வளர்க்கச் செய்ததாக
குறிப்பிடுகிறார். 
 

மேலும் பேசிய அவர், ‘ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதிச்ச்ற்றில் விளையாடிய அணிக்கும், தற்போதைய அணிக்கும் இடையே பல்வேறு மாறுதல்கள் இருந்தன. இரண்டுமே மிகக்கடுமையான சவாலைத் தரும் அணிகள்தான். ஆனாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடிய நமது அணி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. போட்டியின் கடைசி நிமிட விசில் வரைக்கும் போராடி கோல் அடிக்கவேண்டும் என்ற எனது அறிவுரையை வீரர்கள் ஏற்றுக்கொண்டு நடந்தனர். ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் வரை யாருக்கும் காயம் ஏற்படாமல் இருந்தாலே போதும்’ என அவர் தெரிவித்துள்ளார்.