Skip to main content

கிரிக்கெட் தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதல்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
india vs Australia cricket one day match

 

 

இந்தியா- ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆறு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று (27/11/2020) தொடங்குகிறது. 

 

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஒரு நாள் தொடரிலும், தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் டி-20 தொடரிலும், நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி-20 தொடரிலும் பங்கேற்க உள்ளனர். கரோனாவுக்கு பின் ஒரே சமயத்தில் மூன்று கிரிக்கெட் தொடர்கள்  தொடங்குவதால், அதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

 

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று (27/11/2020) தொடங்குகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் இன்று காலை 09.10 மணிக்கு தொடங்க உள்ளது. ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒரு நாள், 3 டி-20, 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.