Skip to main content

இளைய தலைமுறைக்கான புதிய முன்னெடுப்பு - பி.வி.சிந்துவின் அறிவிப்பு

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

pv sindhu

 

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற  ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் சிந்து நிகழ்த்தினார்.

 

இந்நிலையில் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து, விரைவில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "விசாகப்பட்டினத்தில், அரசின் உதவியோடு விரைவில் இளைஞர்களுக்கான பயிற்சி மையம் ஒன்றை தொடங்குவேன். சரியான ஊக்குவிப்பு இல்லாததால் பல இளைஞர்கள் விளையாட்டில் பின்தங்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம்; முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Chief Minister Jagan Mohan's announcement on Visakhapatnam as the new capital of Andhra Pradesh;

 

ஆந்திரப் பிரேதசம் மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத் நகரம் இருந்தது. அதன் பின்னர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்தது. இதையடுத்து, ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராக மாறியதால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. இதில் அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடந்து வந்தன.

 

இதற்கிடையே, ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி, அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், அதில் அமராவதி தலைநகரில் சட்டசபை கூட்டம் நடக்கும், கர்னூல் தலைநகரில் உயர்நீதிமன்றம் செயல்படும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று கூறினார். 

 

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அதில் அவர், விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக மாற உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, ஆந்திரா மாநில அமைச்சரவைக் கூட்டம் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, 'விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாற்றப்படும். மாநிலத்தில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அறிவித்தார். மேலும், அவர் விசாகப்பட்டினம் விஜயதசமி தினமான அக்டோபர் 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும்’ என்று தெரிவித்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத், “அக்டோபர் 23 ஆம் தேதி விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பணியாற்றுவார்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் ஒரேநாளில் மூன்று தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

 

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21- 15, 21- 13 ஆகிய நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் போட்டியின் தனிப்பிரிவில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். 

 

அதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மலேசியாவின் சீ யாங்கை 19- 21, 21- 9, 21- 16என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சிராக் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் இந்திய இணை, இங்கிலாந்தின் பென், ஷான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் பேட்மிண்டனில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

 

22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.