Skip to main content

நிலைத்து நின்ற ஸ்மித் - லபூஷனே... விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

india vs australia

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (07/01/2021) தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில் சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய லபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய தரப்பில், சிராஜ் ஒரு விக்கெட்டும், சைனி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

இந்திய அணி வீரர் ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கிக்கு இரண்டு கேட்சுகளைத் தவறவிட்டார். மேலும் ஒரு எளிய ரன்அவுட் வாய்ப்பிருந்தும் தப்பவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் ஆட்டத்தில், விரைவில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.