இந்தியா ஆஸ்திரேலியா இடையே நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே நடந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி 3 - 0 என்ற நிலையில் தொடரையும் வென்றுள்ளது. மிகவும் நெருக்கடி தரக்கூடிய நிலையில் இந்திய அணி விளையாடி வருவதால், ஒயிட் வாஷ் ஆகாமல் தவிர்க்கும் அளவிற்கு ஆஸ்திரேலிய அணி இன்று களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.