இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த உலகக்கோப்பையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்த அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் மொத உள்ளன. கடைசியாக 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதின. அதன்பிறகு தற்போது தான் மோதவுள்ளன.
அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் இரு அணிகளும் வெவ்வேறு குழுக்களில் இடம்பெறும், இதனால் கடைசி வரை இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ள முடியாத சூழலே நிலவி வந்தது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுவதால் இரு அணிகளும் 16 ஆண்டுகளுக்கு பின் மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
16 ஆண்டுகள் கழித்து தற்போதைய நிலையில் பலம் வாய்ந்த இரு அணிகளாக உள்ள இவை இரண்டும் இன்று மோதிக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி, டிராவிட் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு தற்போது கோலிக்கு கிடைத்துள்ளது.