Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த மாற்றமும் இல்லை - ஐ.சி.சி திட்டவட்டம்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

icc

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த மாற்றமும் இல்லை என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது 9 அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இயல்பாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து இதற்கான புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் 6 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தொடரின் இறுதிப்போட்டியானது, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருந்தது.

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டதால், இறுதிப்போட்டி திட்டமிட்ட தேதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், இறுதிப்போட்டிக்கான தேதியில் மாற்றம் வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஐ.சி.சி., இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

 

இது குறித்து ஐ.சி.சி செய்தித்தொடர்பாளர் பேசும் போது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த மாற்றமும் இல்லை. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது மற்றும் புள்ளி பகிர்வு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறினார்.