மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

ரோஹித், அட்டையில் ஒரு வீரரின் பெயரை தன் தலையின் மேல் வைத்து காட்ட வேண்டும் , ஜடேஜா அந்த வீரரை போல் நடித்து காட்ட வேண்டும். அதனை ரோகித் கண்டுபிடிக்க வேண்டும் இது தான் ‘ஹெட்ஸ் அப், விளையாட்டாகும். முதலில் அந்த அட்டையில் பும்ராவின் பெயர் வந்தது. ஜடேஜா, பும்ராவை போல் பந்துவீசி காட்ட, அதனை மிக விரைவாக சரியாக கணித்தார் ரோகித்.
அதன் பின் கோலியின் பெயர் அந்த அட்டையில் வந்தது. அதனை பார்த்தவுடன் ரோஹித்தை கிண்டலடித்த ஜடேஜா பின்னர் கோலியை போல நடித்து காட்டினார். பின்னர் ரோஹித், சரியாக கோலியின் பெயரை கூறினார். இதனை சற்று தூரத்தில் இருந்து கோலி பார்த்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் விளையாடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
WATCH @ImRo45 take the Heads Up Challenge with @imjadeja ?
— BCCI (@BCCI) August 9, 2019
This one's a laugh riot?? pic.twitter.com/0dJxaY4nIf